EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது & பயன்படுத்துவது எப்படி?

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை உருவாக்குவது & பயன்படுத்துவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு - UAN எண்ணை உருவாக்குவது & பயன்படுத்துவது எப்படி?
EPFO கணக்கு வைத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு – UAN எண்ணை உருவாக்குவது & பயன்படுத்துவது எப்படி?

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வரும் ஊழியர்கள் கட்டாயமாக UAN கணக்கு எண் வைத்திருக்க வேண்டும். தற்போது எப்படி UAN எண்ணை ஆன்லைன் மூலமாகவே உருவாக்குவது மற்றும் அந்த எண்ணை பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

EPFO கணக்கு:

பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் இணைந்துள்ள அனைவருக்குமே EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியுள்ளது. ஆன்லைன் மூலமாகவே எளிதாக பணியாளர்களும் தங்களது UAN எண்களை உருவாக்கிக்கொள்ளலாம். 12 இலக்க UAN எண்ணை உருவாக்கிய பிறகு EPF கணக்கின் இருப்பையும் எளிதில் அறிந்துகொள்ளலாம். தற்போது எப்படி 12 இலக்க UAN எண்ணை உருவாக்குவது என்பதை பார்க்கலாம். UAN எண்ணை உருவாக்க முதலில் UAN ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

மதுரையில் நாளை (ஜூன் 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

பின்பு, அதில் உள்ள நேரடி UAN ஒதுக்கீடு என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்பு, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்யவும். பின்பு, அதில் கேப்ட்சா குறியீட்டையும் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனையும் பதிவு செய்துவிட்டு நீங்கள் ஏதேனும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா என்கிற பகுதிக்கு ‘ஆம்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர் அதில் உள்ள வேலைவாய்ப்பு வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக அடையாளச் சான்று வகை என்பதை கிளிக் செய்து ஆதார் அல்லது விர்ச்சுவல் ஐடி மற்றும் கேப்ட்சாவை பதிவு செய்ய வேண்டும். மீண்டும் Generate OTP என்கிற பகுதியை கிளிக் செய்து OTP எண்ணை பதிவு செய்துவிட்டால் UAN எண்ணை உருவாக்கிவிடலாம்.

Exams Daily Mobile App Download

தற்போது உருவாக்கிய UAN எண்ணை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம். முதலில் UAN செயல்படுத்து என்கிற பகுதியை கிளிக் செய்து UAN எண், ஆதார் எண், பெயர், பிறந்த தேதி , மொபைல் எண் போன்ற அனைத்து விவரங்களையும் பதிவிட வேண்டும். கேப்ட்சாவையும் உள்ளிட்டு பின்னர் அங்கீகார பின்னைப் பெறு என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதனையும் பதிவு செய்து UAN ஐ ஆக்டிவேட் செய் என்பதைக் கிளிக் செய்யவும். பின்னர் UAN எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!