EPF கணக்குதாரர்கள் கவனத்திற்கு – கிளைம் செய்வதை சரிபார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

0
EPF கணக்குதாரர்கள் கவனத்திற்கு - கிளைம் செய்வதை சரிபார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
EPF கணக்குதாரர்கள் கவனத்திற்கு - கிளைம் செய்வதை சரிபார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
EPF கணக்குதாரர்கள் கவனத்திற்கு – கிளைம் செய்வதை சரிபார்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

தற்போது EPF சந்தாதாரர்கள் தங்களது சேமிப்பு கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை கிளைம் செய்ததற்கு பிறகு அதன் நிலையை சில ஆன்லைன் வழிமுறைகள் மூலம் சரி பார்க்கலாம். இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

PF கிளைம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) அல்லது PF என்பது ஒழுங்கமைக்கப்பட்ட துறை ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டம், ஓய்வு காலத்தில் ஊழியர்களுக்கு பெரும் பயன் அளிக்கிறது. பொதுவாக PF திட்டத்தின் கீழ், EPF கணக்கில் பணியாளர் மற்றும் முதலாளி இருவரும் தொடர்ந்து பங்களிக்கின்றனர். அதாவது, பணியாளர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தில் குறைந்தபட்சம் 12% பங்களிப்பை PFக்கு வழங்க வேண்டும். முதலாளியும், பணியாளரின் அடிப்படை ஊதியத்தில் 12% என்ற அதே அளவு தொகையை பங்களிக்க வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வாரத்திற்கு 2 நாட்கள் விடுமுறை!

இப்போது அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த மொபைல் செயலியான உமாங், EPFO க்கான பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்த செயலியை Google Play Store அல்லது App Storeல் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இப்போது ஒரு சில சமயங்களில் EPFO பணியாளர்கள் தங்கள் EPF நிதியை திரும்பப் பெற நேரிட்டால், PF உடன் அவர்களின் கோரிக்கையின் நிலையை சரிபார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த சேவையானது, நாடு முழுவதும் உள்ள எந்த EPFO அலுவலகத்திலும் உரிமைகோரலைப் பதிவு செய்த ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்கும்.

இப்போது நீங்கள் PF பணத்திற்காக சமர்ப்பித்த பிறகு உரிமைகோரலின் நிலையை கண்காணிக்க ஒரு சில வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில்,

முதலாவதாக UAN போர்ட்டல் மூலம் உங்கள் EPF உரிமைகோரல் நிலையை சரிபார்க்கலாம்:
  • இதற்கு UAN உறுப்பினர் போர்ட்டலுக்கு சென்று உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழையவும்.
  • ‘ஆன்லைன் சேவைகள்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ‘கிளைம் நிலையை கண்காணிக்கவும்’ என்ற மூன்றாவது விருப்பத்தை கிளிக் செய்யவும்.
  • திரையில், உங்கள் ஆன்லைன் திரும்பப் பெறுதல்/பரிமாற்ற உரிமைகோரலின் முன்னேற்றத்தை காண்பீர்கள்.
UAN இல்லாமல் EPF உரிமைகோரல் நிலையை சரிபார்க்க:
  • EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்தை திறக்கவும்.
  • பின்னர் ‘உங்கள் உரிமைகோரல் நிலையை அறிந்து கொள்ளுங்கள்’ பகுதிக்கு செல்லவும்.
  • இப்போது ‘கிளைம் நிலையை அறிய இங்கே கிளிக் செய்யவும்’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • கீழ்தோன்றும் மெனுவிலிருந்து உங்கள் PF அலுவலக நிலை மற்றும் நகரத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் உங்கள் PF எண்ணை உள்ளிட்டு ‘Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் உரிமைகோரலின் நிலை இப்போது திரையில் காண்பிக்கப்படும்.
EPFO இணையதளம் வழியாக உங்கள் EPF உரிமைகோரல் நிலையை சரிபார்க்க:
  • epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்தை திறக்கவும்.
    இப்போது ‘சேவைகள்’ ஆப்ஷனின் கீழ் ‘பணியாளர்களுக்கான’ விருப்பத்தை கண்டறியவும்.
  • பக்கத்தில் உள்ள ‘சேவைகள்’ என்ற ஆப்ஷனில் ‘உங்கள் உரிமைகோரல் நிலையை அறிந்து கொள்ளுங்கள்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.

  • EPFO போர்டல், ‘https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login’ என்ற இணைப்பு காண்பிக்கப்படும்.
  • இப்போது உங்கள் UAN மற்றும் கடவுச்சொல், கேப்ட்சாவை உள்ளிட்டு உங்கள் கணக்கை அணுகவும்.
  • அங்கு ‘வியூ க்ளைம் ஸ்டேட்டஸ்’ என்ற விருப்பம் தோன்றும்.
  • உங்கள் EPF கோரிக்கையின் நிலையை சரிபார்க்க, அந்த விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
SMS மூலம் சரிபார்க்க:
  • உங்கள் மொபைல் எண் UAN கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், EPFO ஆனது SMS அலெர்ட்களை அனுப்புகிறது.
  • இதற்கு ஊழியர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
  • இந்த SMS, ‘EPFOHO UAN LAN’ என்ற வடிவில் இருக்க வேண்டும்.
  • இந்த வடிவமைப்பில் உள்ள ‘LAN’ என்பது நீங்கள் தகவலைப் பெற விரும்பும் மொழிக் குறியீட்டை குறிக்கிறது. இந்த வசதி 10 மொழிகளில் கிடைக்கிறது.

அதனை பெற்றுக்கொள்ள,

  • ஆங்கிலம் – இயல்புநிலை
  • இந்தி – HIN
  • பஞ்சாபி – PUN
  • குஜராத்தி – GUJ
  • மராத்தி – MAR
  • கன்னடம் – KAN
  • தெலுங்கு – TEL
  • தமிழ் – TAM
  • மலையாளம் – MAL
  • பெங்காலி – BEN என உள்ளிட்ட வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!