PF பேலன்ஸை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
PF பேலன்ஸை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PF பேலன்ஸை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
PF பேலன்ஸை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள பல்வேறு வசதிகள் உள்ளன.

பல்வேறு வசதிகள்:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலோ அல்லது வேறு பணிக்கு மாறுதலாகி சென்றாலோ அவரது தொழிலாளர் வைப்பு நிதியில் சேகரிக்கப்பட்ட நிதியை பெறுவது என்பது ஆகும். இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டம் ஆகும். மேலும் கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – எவ்வாறு படிக்க வேண்டும்? முழு விவரம் இதோ!

இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை மட்டும், பயனாளர்களின் வங்கிக் கணக்கில், வரவு வைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது, மேலும் அதற்கு வட்டி எவ்வளவு வரும் என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ளலாம். அதாவது எஸ்எம்எஸ், ஆன்லைன், தவறிய அழைப்பு, உமங் செயலி என பல்வேறு வழிகளில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் அறிவது எப்படி:

  • https://epfindia.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்களது UAN எண்ணைப் பதிவிட்டு, கடவுச்சொல் மற்றும் கேப்சாவை சரியாக பதிவிடவும்.
  • அதில், இ-பாஸ்புக் என்று இருக்கும், அதை கிளிக் செய்யவும். அனைத்துத் தகவலும் சரியாக இருந்தால், புதிய பக்கத்துக்குச் செல்லும்.
  • அங்கு மெம்பர் ஐடி என்று இருக்கும். அதைத் திறந்தால், உங்களது வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் தொகை காண்பிக்கப்படும்.

உமங் செயலி மூலம் அறிவது எப்படி:

  • செல்லிடப்பேசியில் உமங் செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  • அதில் இபிஇஎஃப் என்பதை கிளிக் செய்யவும்.
    Exams Daily Mobile App Download
  • எம்ப்ளாயி சென்ட்ரிக் சர்வீசஸ் என்பதை கிளிக் செய்யவும். பாஸ்புக் வழியாக என்ற வாய்ப்பை தேர்வு செய்யலாம்.
  • பதிவு செய்யப்பட்ட செல்லிடப்பேசி எண்ணிற்கு ஓடிபி வரும். அதனை பதிவிட்டால், உங்களது வருங்கால வைப்பு நிதிக் கணக்கிலிருக்கும் தொகை தெரியவரும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!