தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கார்டில் பெயரை நீக்குவது எப்படி?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கார்டில் பெயரை நீக்குவது எப்படி?
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர்களின் பெயர் நீக்கம் செய்தல் போன்ற வேலைகளை தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் செய்யலாம். அதற்கான வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரேஷன் கார்டு:

இந்தியாவில் மாநில அரசுகள் விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அரசு வழங்கி வருகிறது. கடந்த முழு ஊரடங்கு காலத்தில் அனைத்து மாநில அரசுகளும் ரேஷன் கடைகள் மூலம் நிவாரணங்களை பெற்று மக்கள் பயனடைந்தனர். இந்தியா முழுவதும் வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களில் பணி புரிபவர்கள் மத்திய அரசின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றனர்.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – தமிழ் மொழியில் செயலி!

உங்கள் ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினரின் பெயரை நீக்க வேண்டும் என்றாலும், புதிய உறுப்பினர் பெயரை சேர்க்க வேண்டும் என்றாலும் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகிவிட்ட நிலையில் ரேஷன் கார்டில் குடும்ப நபரின் பெயர் நீக்கம் போன்ற வேலைகளையும் ஆன்லைன் மூலம் எளிதாக செய்யலாம். வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டில் பெயர் மாற்றங்கள் நீக்குதல் எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

  • முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும் அதில் `பயனாளர் நுழைவு’ என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் உங்களின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை உள்ளீடு , கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, `பதிவு செய்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • பதிவு செய்த பிறகு உங்களுடைய மொபைலுக்கு OTP எண் வரும். அந்த எண்ணை உள்ளீடு செய்யவும்.
  • குடும்ப நபர்கள், அட்டை எண், பெரியவர் அல்லது சிறியவர் எண்ணிக்கை, சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப அட்டை செயலில் உள்ளதா போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.
  • பெயர் நீக்கம் செய்வதற்கு இடது புறத்தில் `அட்டை பிறழ்வுகள்’ என்பதை தேர்வு செய்யவும். பிறகு புதிய கோரிக்கை என்பதை கிளிக் செய்யவும்.
  • குடும்ப அட்டை எண், குறியீடு எண் ஆகியவற்றை உள்ளீடு சேவை தேர்வுகளில் ‘குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை தேர்தெடுத்து காரணத்தை குறிப்பிடவும். திருமணம் காரணமாக பெயர் நீக்க வேண்டியிருந்தால், சம்பந்தப்பட்டவரின் திருமணச் சான்றிதழை பதிவேற்றவும்.
  • இறுதியாக உறுதிப்படுத்துதல் என்பதை டிக் செய்து, `பதிவு செய்ய’ என்பதை க்ளிக் செய்த பிறகு 2- 3 நாட்களுக்கு பெயர் நீக்கம் ஆகிவிடும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!