விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியல் கோபி யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபி யார் தெரியுமா? வியப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஸ் பற்றி நம்மை ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காண்போம்.

நடிகர் சதீஷ்:

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவின் கணவர் கோபி வேடத்தில் வரும் கதாபாத்திரத்திற்கு அதிக ரீச் கிடைத்துள்ளது. இந்த வேடத்தில் நடிகர் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார். கோபி கதாபாத்திரம் மனைவியை ஏமாற்றுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் சமாளிக்கும் விஷயங்கள் அனைத்தும் ட்ரோல் செய்யப்படும் அளவிற்கு பிரபலம். கோபி சீரியலில் எப்போது மாட்டிக் கொள்வார் என்பதை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். தற்போது கோபி தனது அப்பாவிடம் கையும், களவுமாக மாட்டியும் பொய் சொல்லி சமாளித்து வருகிறார்.

‘கலக்கப்போவது யாரு’ பாலாவை கலாய்க்கும் வித்யூ லேகா – குக் வித் கோமாளி சீசன் 3 ப்ரோமோ ரிலீஸ்!

கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஸ் 1979ம் ஆண்டு பிறந்துள்ளார். இவரது சொந்த ஊர் சென்னை. பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளையும் சென்னையிலேயே முடித்துள்ளார். நடிகர் சதீஸ் சினிமாக்களில் குணச்சித்திர நடிகராகவும், நாடகங்களிலும், மாடலிங் துறை, விளம்பரப் படங்கள் என்று பலவற்றிலும் பணியாற்றியுள்ளார். சதீஸ் முதன் முதலில் 1999ம் ஆண்டு மின்சாரப்பூவே என்ற திரைப்படத்தின் மூலம் திரையில் அறிமுகம் ஆகியுள்ளார். பல படங்களிலும் நடித்துள்ள சதீஸ் குறிப்பாக ராமானுஜர் வாழ்கை வரலாறு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய “பிக் பாஸ்” தாமரை – வைரலாகும் வீடியோ!

அதிலும் எம்.ஜி.ஆரின் வாழ்கை வரலாறு படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும் தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகம் ஆன சதீஷ் மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாணபரிசு, மகராணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவை அனைத்தையும் விட தற்போது அவர் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக வெளிப்படுத்தி வரும் நடிப்பு அபாரமாக இருக்கிறது. இதற்கு இவர் ரசிகர்களிடம் கோபியாக பெறும் திட்டுக்களே சாட்சியாக உள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!