போலீசார் கவனத்திற்கு – ஜன.26 விடுமுறை ரத்து! முக்கிய அறிவிப்பு!

0
போலீசார் கவனத்திற்கு - ஜன.26 விடுமுறை ரத்து! முக்கிய அறிவிப்பு!
போலீசார் கவனத்திற்கு - ஜன.26 விடுமுறை ரத்து! முக்கிய அறிவிப்பு!
போலீசார் கவனத்திற்கு – ஜன.26 விடுமுறை ரத்து! முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் வரும் ஜன.26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு காரணங்களுக்காக மாநில போலீசாருக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த இந்த பதிவில் காணலாம்.

குடியரசு தினம்:

இந்தியாவில் முதலில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்று வந்தது. பின்னர் சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டிஷ் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது. இத்தகைய சட்டம் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசமைப்பு சட்டம் அமலான நாளை குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டில் பெயரை நீக்குவது எப்படி?

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான குடியரசு தினம் இன்னும் சில தினங்களில் அதாவது வரும் ஜன.26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று டெல்லியில் குடியரசு மாளிகையில் இருந்து டெல்லி இந்தியா கேட் வரை அணிவகுத்து வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்தகைய அணிவகுப்பு விஜய் சவுக் முதல் நேஷனல் ஸ்டேடியம் வரை மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு சற்று கொரோனா பெருந்தொற்று குறைந்து காணப்படுவதால் அணிவகுப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – தமிழ் மொழியில் செயலி!

இந்த அணிவகுப்பில் மாநில காவல்துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளும் பங்குபெறும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜன.26ம் தேதி கொண்டாடப்பட உள்ள குடியரசு தினத்தை முன்னிட்டு அணிவகுப்பில் பங்கேற்பது மற்றும் பாதுகாப்பு பணிகளில் காவலர்கள் கலந்து கொள்ள வேண்டும். அதனால் அனைத்து காவலர்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மருத்துவ காரணங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என டில்லி சிறப்பு போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!