RailTel நிறுவனத்தில் ரூ.1,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
RailTel நிறுவனத்தில் ரூ.1,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RailTel நிறுவனத்தில் ரூ.1,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
RailTel நிறுவனத்தில் ரூ.1,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் RailTel நிறுவனத்தில் ரூ.1,80,000 சம்பளத்தில் மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 69 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையதளம் மூலம் வரவேற்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட், இந்திய ரயில்வேயின் உரிமையின் கீழ் செயல்பட்டு வரும் ரயில்வே அமைச்சகம் ஆகும். இந்த நிறுவனம் இந்திய அரசு பிராட்பேண்ட் மற்றும் VPN சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட RailTel, நாடு முழுவதும் பிராட்பேண்ட், தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா நெட்வொர்க்கை உருவாக்குதல், ரயில் கட்டுப்பாட்டு செயல்பாடு ஆகியவற்றில் செயல்படுகிறது.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – தமிழ் மொழியில் செயலி!

இப்போது இந்த ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங், நிதி மற்றும் சட்டத் துறைகளில் பல்வேறு மேலாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இப்போது இப்பணியில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் railtel.cbtexam.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிப்ரவரி 23 வரை விண்ணப்பங்களை செலுத்தலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பதவி:

  1. துணை மேலாளர்
  2. மூத்த மேலாளர்
  3. மேலாளர்

காலியிடங்கள்: மொத்தம் 69

தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் BE, BTech அல்லது BSc ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • இதில் துணை மேலாளர் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் MBA அல்லது முதுகலை பிசினஸ் அட்மினிஸ்ரேஷன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • தவிர நிதி மற்றும் சட்டத் துறை துணை மேலாளர் பதவிக்கு, விண்ணப்பதாரர்கள் CA, ICWA அல்லது LLB ஆகியவற்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • துணை மேலாளர் – 21 முதல் 28 வயதுடையவராக இருக்க வேண்டும்.
  • மூத்த மேலாளர் – 27 முதல் 34 வயதுடையவராக இருக்க வேண்டும்.
  • மேலாளர் – 23 முதல் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • அதிகாரப்பூர்வ இணையதளமான  railtel.cbtexam.in திறக்கவும்.
  • regular recruitment பக்கத்தில் click here to apply என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது நீங்கள் விரும்பும் பதவியை தேர்வு செய்து படிவத்தை நிரப்பவும்

  • தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், கையொப்பம், இடது விரல் கை ரேகை ஆகியவற்றை பதிவு செய்யவும்.
  • கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்.
  • இதில் SC, PwBD மற்றும் ST பிரிவினர் ரூ.600 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • மற்றவர்கள் ரூ,1,200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இப்போது படிவத்தை பதிவிறக்கம் செய்து எதிர்கால குறிப்புக்காக பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

தேர்வு செயல்முறை:

  • ரெயில்டெலில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் மொத்தம் 150 மதிப்பெண்கள் மதிப்புள்ள MCQகளுடன் 2 மணிநேர ஆன்லைன் தேர்வை நடத்தப்படும்.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சுற்றுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1200 செலுத்த வேண்டும்.
  • மேலும் SC/ST/PwBD பிரிவினருக்கு கட்டணம் ரூ.600 ஆகும்.

சம்பளம்:

  • துணை மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ,1,40,000
  • மூத்த மேலாளர் பதவிக்கு ரூ.60,000 முதல் ரூ.1,80,000
  • மேலாளர் பதவிக்கு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 சம்பளமாக அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!