PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

0
PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!
PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!
PF பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் இதோ!

PF கணக்குதாரர்கள் KYC மற்றும் UAN எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்த பிறகு EPFO கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை திரும்பப் பெற அரசாங்கம் அனுமதித்துள்ளது. இந்த பணத்தை பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை விரிவாக காணலாம்.

PF பணம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) அமைப்பு ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (PF) இருப்பை ஆன்லைனில் எளிதாக திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, EPFO உறுப்பினர்கள் KYC மற்றும் UAN எண்ணை ஆதார் அட்டையுடன் இணைத்த பிறகு EPFO கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை திரும்பப் பெற அரசாங்கம் அனுமதித்துள்ளது. அந்த வகையில் உறுப்பினர்கள் இனி e-SEWA போர்டல் மூலம் இந்த பணத்தை திரும்ப பெற முடியும். வழக்கமாக ஊழியர்கள் தங்கள் மாத அடிப்படை ஊதியத்தில் 12 சதவீதத்தை EPFO கணக்கில் செலுத்த வேண்டும்.

Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – சூப்பரான சேமிப்பு திட்டம்!

இப்போது பணியாளர்கள் ஓய்வு பெற்றவுடன் PF இல் உள்ள தங்களது முழு சேமிப்பையும் திரும்பப் பெறலாம். இருப்பினும், அவர்கள் குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்தால் EPFO கணக்கில் இருந்து ஒரு பகுதியளவு தொகையை தேவைக்கு ஏற்ப திரும்பப் பெறலாம். இந்த PF பணத்தை திரும்பப் பெறுவதற்கு UAN உடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இந்த சேவைகளை EPFO போர்டல் அல்லது UMANG ஆப் மூலம் ஆன்லைனில் மேற்கொள்ள முடியும். இதற்கான எளிய வழிமுறைகளை விரிவாக காணலாம்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு – பிப்.25ல் பேச்சுப்போட்டி அறிவிப்பு!

KYC செயல்முறை: சேவையின் முதல் ஐந்து ஆண்டுகளில் நிதியை திரும்பப் பெறுவது அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. KYC செயல்முறைக்கு, பான் கார்டு அவசியம். அந்த வகையில் EPFO, செயல்முறையை முடித்த பிறகு, கணக்கின் நிலை சரிபார்க்கப்பட்டதாக மாற்றும்.

PF திரும்ப பெறுவதற்கான வழிகாட்டுதல்கள்:
  • https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்தில் UAN போர்ட்டலை பார்வையிடவும்
  • உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைந்து, சரிபார்ப்புக்காக கேப்ட்சாவை உள்ளிடவும்.
  • இப்போது ‘ஆன்லைன் சேவைகள்’ பக்கத்திற்கு சென்று, மெனுவில் உள்ள ‘கிளைம் (படிவம்-31, 19 & 10சி)’ என்ற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
  • அடுத்து உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை உள்ளிட்டு, ‘சரிபார்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ‘ஆம்’ என்பதைக் கிளிக் செய்து தொடரவும்.
  • இதற்குப் பிறகு, ‘ஆன்லைன் உரிமைகோரலுக்காக தொடரவும்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது உரிமைகோரல் படிவத்தில், ‘நான் விண்ணப்பிக்க விரும்புகிறேன்’ என்ற ஆப்ஷனின் கீழ் உங்களுக்கு தேவையான உரிமை கோரலை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் நிதியை திரும்பப் பெற, ‘PF அட்வான்ஸ் (படிவம் 31)’ என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • அத்தகைய முன்பணத்தின் நோக்கம், தேவையான தொகை மற்றும் பணியாளரின் முகவரியை வழங்கவும்.
  • இப்போது, சான்றிதழில் கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • நீங்கள் படிவத்தை பூர்த்தி செய்த நோக்கத்திற்காக, ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படலாம்.
  • இப்போது பணம் எடுப்பதற்கான கோரிக்கையை முதலாளி அங்கீகரித்த பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை பெறுவீர்கள்.
  • பொதுவாக வங்கி கணக்கில் பணம் வரவு வைக்க 15-20 நாட்கள் ஆகும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!