தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு – பிப்.25ல் பேச்சுப்போட்டி அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு - பிப்.25ல் பேச்சுப்போட்டி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு - பிப்.25ல் பேச்சுப்போட்டி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கவனத்திற்கு – பிப்.25ல் பேச்சுப்போட்டி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்குகின்றன. இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்த உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பேச்சு போட்டி

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டியை நடத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Jio, Airtel சிம் பயன்படுத்துவோர் கவனத்திற்கு – தினசரி 1.5 GB டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்கள்!

மேலும் இந்த அறிவிப்பில், சிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறை சாா்பாக வருகிற பிப்ரவரி 25ம் தேதி அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு முற்பகல் 9 மணி அளவில் நடைபெறும் என்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி அளவில் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி!

இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து சிவகங்கையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 04575 241487 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். அத்துடன் மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த இந்த வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!