TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு - ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

இப்போது TNPSC குருப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், எந்த இணையதளத்தில் எப்படி தங்களது விண்ணப்பங்களை செலுத்தலாம் என்ற விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC குரூப் 4

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 உள்ளிட்ட 32 வகையான தேர்வுகளை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது, தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் போட்டித்தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகள் நிமித்தம் இப்போட்டித்தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு அனைத்து தேர்வுகளையும் நடத்துவதாக TNPSC வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அந்த வகையில் 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான TNPSC குரூப் 2 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறைகள் கடந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட இருக்கிறது. அதே போல சுமார் 7000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு அறிவிப்புகள் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கும் நிலையில், இப்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. ஆனால் TNPSC குரூப் 4 தேர்வுக்கு எந்த இணையதளத்தில் எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரம் தெரியாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள், ஆன்லைனில் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

  • முதலாவதாக விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/Home.aspx இந்த இணையதளத்துக்கு செல்லவும்.
  • அங்கு ‘அப்ளை ஆன்லைன்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து ‘விண்ணப்பிக்க’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • பிறகு, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும்.
  • அங்கு, தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும், கடைசி தேதி போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அந்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 2 மொழிகளில் இருக்கும்.
  • தேவைப்பட்டால் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • தொடர்ந்து அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘அப்ளை நவ்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயனராக நீங்கள் இருந்தால், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள் நுழையவும்.

  • இப்போது புதிய பயனராக இருந்தால் முகப்பக்கத்துக்கு சென்று நிரந்தப் பதிவு விவரங்கள் என்பதை கிளிக் செய்யவும்.
  • அங்கு புதிதாக பதிவு செய்து கொள்ளவும்.
  • இதற்கு உங்கள் அடிப்படை விவரங்களை கொடுக்க வேண்டும்.
  • தொடர்ந்து பதிவு செய்த பிறகு பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து லாகின் செய்யவும்.
  • இப்போது திறக்கும் பக்கத்தில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என ஒரு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதை கிளிக் செய்து உள் நுழையவும்.
  • அங்கு விண்ணப்ப விவரங்கள் என்ற பிரிவு இருக்கும்.
  • அதில் விண்ணப்ப விவரங்கள், தகவல்தொடர்பு, கல்வித்தகுதி உள்ளிட்ட 10 விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும்.
  • அதை சரியாக நிரப்பவும்.
  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விடும்.
  • அதை எதிர்கால தேவைக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!