பயிற்சி மையங்களுக்கு கடும் கட்டுப்பாடு – புதிய விதிமுறைகள் வெளியீடு!

0
பயிற்சி மையங்களுக்கு கடும் கட்டுப்பாடு - புதிய விதிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் இயங்கும் தனியார் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பயிற்சி மையம்:

இந்தியா முழுவதும் இயங்கி வரும் தனியார் பயிற்சி மையங்களில் மாணவர் தற்கொலை, தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்திடம் பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து தற்போது மத்திய கல்வி அமைச்சகம் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டபடிப்பிற்க்கு குறைவான கல்வி தகுதி பெற்ற நபர்களை ஆசிரியராக நியமிக்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அத்துடன் தவறான வாக்குறுதிகளை அளித்து 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை பயிற்சி மையங்களில் சேர்க்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் தேர்வு முடிவு, அவர்களின் ரேங்க் ஆகியவற்றை பயன்படுத்தி போலியான விளம்பரங்களை வெளியிடக்கூடாது. பயிற்சி மையங்கள் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவிட வேண்டும். அடுத்தாக பயிற்சி மையங்களில் முறையான கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

இனி இப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம் – வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!