வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவும் ஹரப்பா பண்பாடும்

1

வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவும் ஹரப்பா பண்பாடும்

இந்தியாவில் மனித குலத்தின் வரலாறு, வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்தே தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்;கு எழுத்து வடிவிலான சான்றுகள் கிடைப்பதில்லை. இருப்பினும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைத்துள்ள ஏராளமான தொல்பொருள் சான்றுகளின் அடிப்படையில் இக்கால வரலாற்றைப் படைக்க முடிகிறது. கற்கருவிகள், மட்பாண்ட ஓடுகள், கலைப்பொருட்கள், உலோகக் கருவிகள் போன்ற பொருட்கள் இவற்றில் அடங்கும். இக்கால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கு தொல்லியலின் வளர்ச்சி பெரிதும் பயன்படுகிறது.இந்தியாவைப் பொறுத்தவரை, வரலாற்றுக்கு முந்தைய காலத்தை, பழைய கற்காலம், இடை கற்காலம், புதிய கற்காலம், உலோக காலம் என வகைப்படுத்தலாம். இருப்பினும், இந்திய துணைக்கண்டம் முழுவதற்கும் இந்த காலவரை ஒரே மாதிரியாகப் பொருந்துவதில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலம் அறிவியலின் துணைகொண்டு நன்கு வரையறுக்கப்படுகிறது. பொதுவாக ரேடியோ கார்பன் முறையே இதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணக்கிடும் முறையே ரேடியோ கார்பன் முறையாகும். மற்றொரு முறை டென்ட்ரோ காலக் கணிப்பு எனப்படுகிறது. மரத்தின் உள்வெட்டுத் தோற்றத்தில் காணப்படும் வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு காலத்தை கணக்கிடுவதே இம்முறையாகும்.

பழைய கற்காலம்

இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டத் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இலைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர். இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு:

அ. வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி

ஆ. வடஇந்தியாவில் சிவாலிக் குன்றுகள்

இ. மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா

ஈ. நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று

உ. ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல்

ஊ. சென்னைக் கருகிலுள்ள அத்திரம்பாக்கம்.

  • பழைய கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும், உண்ணக் கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர். எனவே, இவர்களை, ‘உணவை சேகரிப்போர்’ என்று அழைக்கின்றனர். விலங்குகளை வேட்டையாடுவதற்கு கற்கருவிகளையே இந்த மக்கள் பயன்படுத்தினர். கையளவு கற்கருவி மற்றும் உடைந்த கூழாங்கற்களே இவர்களது ஆயுதங்களாகும்.
  • கற்கருவிகள், கெட்டியான குவார்ட்சைட் எனப்படும் பாறைக்கற்களாலானவை. ஆற்றுப் படுகைகளி;ல் பெரிய கூழாங்கற்கள் கிடைத்தன. உருவத்தில் பெரிய விலங்குகளை வேட்டையாடுவதற்கு பெரிய கற்கோடரிகளை இவர்கள்; பயன்படுத்தியிருக்கவேண்டும்.
  • மேலும், குழுக்களாக ஒன்றிணைந்து பெரிய விலங்குகளை இவர்கள் வீழ்த்தியிருக்கவேண்டும் பழைய கற்கால மக்களின் மொழி மற்றும் தகவல் பரிமாற்றமுறை குறித்து எதுவும் தெரியவில்லை. காலப்போக்கில் இவர்களது வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.
  • விலங்குகளை வளர்க்கவும், கரடுமுரடாக மட்பாண்டங்களை உருவாக்கவும் ஒரு சில தாவரங்களை வளர்க்கவும் இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர்.
  • பிம்பிட்கா போன்ற ஒருசில பழைய கற்கால இடங்களில் இவர்களது ஓவியங்களும் காணப்படுகின்றன. பழைய கற்காலம் என்பது கி.மு.10,000 ஆண்டுக்கு முற்பட்டதாகும்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

இடைக்கற்காலம்

  • மனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக் கற்காலம் என்று அழைக்கிறோம். இது சுமார் கி.மு.10000 முதல் கி.மு.6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். புழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது.
  • இடைகற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கனச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைகற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஓரளவு யூகிக்க முடிகிறது.
  • இடைக் கற்காலத்தில் வேறுவகையிலான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய கற்களாலான இவை பெரும்பாலும் அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதாகும். எனவே, இவற்றை நுண்கற்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கிறோம்.
  • வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகியன இக்காலத்திலும் தொடர்ந்தன. பெரிய விலங்குகளுக்குப்பதில் சிறிய விலங்குகளை வேட்டையாடுவததிலும், மீன் பிடிப்பதிலும் இக்கால மக்கள் அதிக கவனம் செலுத்தினர். வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.
  • மேலும், ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழும் போக்கும் வளரத் தொடங்கியது. ஆகையால், பிராணிகளை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், தொடக்கக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் தொடங்கின. நாய், மான், பன்றி, தீக்கோழி போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளமை இதற்கு சான்றாகும்.
  • ஒரு சில இடங்களில் நுண்கற்கருவிகள் மற்றும் மேலோடுகளுடன் சேர்த்து சவ அடக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

உலோக காலம்

  • புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் எனப்பட்டது. இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • மனித குல வரலாற்றில், உலோகத்தை உருக்கிவார்க்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததும் உலோகத்திலான பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியதும் முக்கிய நிகழ்வுகளாகும்.
  • ஆனால் கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன. ஒரு சில நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும் தொடங்கினர். இதனால், செம்பு – கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன.
  • பொதுவாக, ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு – கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும்.
  • தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியான சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார் கி.மு.2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
  • தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • செம்பு – கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக் காலமாகும். வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி அடிக்கடி குறிக்கப்படுகிறது.

இடைக்கற்காலம்

  • மனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக் கற்காலம் என்று அழைக்கிறோம். இது சுமார் கி.மு.10000 முதல் கி.மு.6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும். புழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது.
  • இடைகற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கனச் மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைகற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஓரளவு யூகிக்க முடிகிறது.
  • இடைக் கற்காலத்தில் வேறுவகையிலான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய கற்களாலான இவை பெரும்பாலும் அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதாகும். எனவே, இவற்றை நுண்கற்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கிறோம்.
  • வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகியன இக்காலத்திலும் தொடர்ந்தன. பெரிய விலங்குகளுக்குப்பதில் சிறிய விலங்குகளை வேட்டையாடுவததிலும், மீன் பிடிப்பதிலும் இக்கால மக்கள் அதிக கவனம் செலுத்தினர். வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர்.
  • மேலும், ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழும் போக்கும் வளரத் தொடங்கியது. ஆகையால், பிராணிகளை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், தொடக்கக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் தொடங்கின. நாய், மான்,  பன்றி, தீக்கோழி போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளமை இதற்கு சான்றாகும்.
  • ஒரு சில இடங்களில் நுண்கற்கருவிகள் மற்றும் மேலோடுகளுடன் சேர்த்து சவ அடக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.

புதிய கற்காலம்

  • மனித நாகரிகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை புதிய கற்காலத்தில்தான் காணமுடிகிறது. புதிய கற்காலம் சுமார் கி.மு.6000 முதல் கி.மு.4000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும்.
  • இந்தியாவின் பல பகுதிகளில் புதிய கற்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கு, பீகாரில் சிராண்ட், உத்திரப் பிரதேசத்தில் பீலான் சமவெளி, தக்காணத்தில் பல இடங்கள் ஆகியனவும் இதிலடங்கும்.
  • தென்னிந்தியாவில் பல புதிய கற்கால வசிப்பிடங்களில் அகழ் வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல், தமிழ்நாட்டில் பையம்பள்ளி ஆந்திரப்பிரதேசத்தில் உட்னூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
  • வேளாண்மை, விலங்குகளை வளர்த்தல், கற்கருவிகளை பளபளப்பாக்குதல் மட்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்கால பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகும்.
  • தாவரங்களைப் பயிரிடத் தொடங்கியதாலும், பிராணிகளை வளர்த்தமையாலும்,  ஓரிடத்தில் தங்கிவாழ முற்பட்ட புதிய கற்கால மக்கள், கிராம சமுதாயங்கள் உருவாகவும் வழி வகுத்தனர்.
  • கருவிகளை உருவாக்குவதிலும், மனிதனுக்குத் தேவையான சாதனங்களைப் படைப்பதிலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களை இக்காலத்தில் தெளிவாகக் காணமுடிகிறது. கற்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்ட்டன.
  • வேட்டையாடுவதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் பளபளப்பான கூரிய கற்கோடரிகள் பெரிதும் பயனுடையதாக இருந்தன. புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதிலாக, களிமண் கற்களாலான குடிசைகள் அமைக்கப்பட்டன. மட்பாண்டங்கள் செய்வதற்கு சக்கரம் பயன்படுத்தப்பட்டது.
  • சமைப்பதற்கும், உணவு தானியங்களை சேமித்து வைக்கவும் மட்பாண்டங்கள் பயன்பட்டன. இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெரிய மண்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டன.
  • சாகுபடி முறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இடங்களில், கோதுமை, பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்பட்டன.
  • கிழக்கிந்தியாவில் நெல் அதிகம் பயிரிடப்பட்டது. செம்மறியாடுகள், ஆடுகள்,  மாடுகள் வளர்ப்பு பரவலாகக் காணப்பட்டது. பயிரிடுவதற்கும் போக்குவரத்துக்கும் கால்நடைகள் பயன்பட்டன. பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை புதிய கற்கால மக்கள் அணிந்தனர்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

உலோக காலம்

  • புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் எனப்பட்டது. இக்காலத்தில் செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
  • மனித குல வரலாற்றில், உலோகத்தை உருக்கிவார்க்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததும் உலோகத்திலான பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியதும் முக்கிய நிகழ்வுகளாகும்.
  • ஆனால் கற்கருவிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன. ஒரு சில நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும் தொடங்கினர். இதனால், செம்பு – கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன.
  • பொதுவாக, ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக, ஹரப்பா பண்பாடு செம்பு – கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும்.
  • தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, துங்கபத்திரா, பெண்ணாறு, காவிரி ஆகிய நதிகளின் பள்ளத்தாக்குகளில் இக்காலத்தில் குடியான சமுதாயங்கள் தோன்றி வளர்ந்தன. உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை என்றாலும், சுமார் கி.மு.2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
  • தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில் வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • செம்பு – கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக் காலமாகும். வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி அடிக்கடி குறிக்கப்படுகிறது.
  • தென்னிந்தியாவில், இரும்புக் காலமும் பெருங்கல் காலமும் (மெகாலிதிக்) சமகாலம் எனக் கருதப்படுகிறது. மெகாலித் என்றால் பெரிய கல் என்று பொருள். கல்லறையின்மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்களை இது குறிக்கிறது. அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
  • கர்நாடகத்திலுள்ள ஹல்லூர், மாஸ்கி, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள நாகார்ஜீன கொண்டா, தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
  • கல்லறைக் குழிகளில் கருப்பு – சிகப்பு வண்ணத்தாலானப் பானையோடுகள்,  இரும்பாலான மண்வெட்டி மற்றும் அரிவாள், சிறு ஆயுதங்கள் போன்றவை காணப்படுகின்றன.

ஹரப்பா நாகரிகம்

  • சிந்துப் பள்ளத்தாக்கில் மேற்கு பஞ்சாபிலுள்ள ஹரப்பா சிந்து மாகாணத்திலுள்ள மொகஞ்சாதாரோ ஆகிய இரு இடங்களிலும்தான் முதன்முதலில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • இவ்விரண்டு இடங்களும் தற்போது பாகிஸ்தானில் உள்ளன. இந்த அகழ்வாய்வுகளின் பயனாக ஒரு சிறந்த நாகரிகம் சிந்து வெளியில் இருந்தது கண்டறியப்பட்டது.
  • தொடக்கத்தில் இந்த நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என வழங்கப்பட்டது. சிந்துசமவெளிக்கு அப்பாலும் இந்த நாகரிகத்தின் தடங்கள் பரவியிருந்தமையால் பின்னர் இது ‘சிந்து நாகரிகம்’ என்று அழைக்கப்பட்டது.
  • முதலில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட இடத்தை நினைவுகூறும் வகையில் ‘ஹரப்பா நாகரிகம்’ என்றும் இது வழங்கப்படுகிறது.

முக்கிய இடங்கள்

  • பல்வேறு இடங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அவற்றில் குறிப்பிடத்தக்கவை வருமாறு : சிந்துவிலுள்ள கோட்டிஜி, ராஜஸ்தானிலுள்ள காலிபங்கன், பஞ்சாபில் ரூபார், ஹரியானாவில் பினவாலி, குஜராத்திலுள்ள லோத்தல், சுர்கோடாடா, மற்றும் தோலவிரா. பெரிய நகரங்கள் பெரும்பாலும் நூறு ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டவையாகும்.
  • சிந்துவெளி நகரங்களிலேயே மிகப் பெரியது மொகஞ்சாதாரோ. இது சுமார் இருநூறு ஹெக்டேர் பரப்பைக் கொண்டது என மதிப்பிடப்படுகிறது.

சமூக வாழ்க்கை

  • ஹரப்பா மக்களின் சமூக வாழ்க்கையை அறிந்து கொள்ள போதிய சான்றுகள் கிடைத்துள்ளன. ஆண், பெண் இருபாலரும் கீழாடை, மேலாடை என்ற இரண்டுவித ஆடைகளையும் அணிந்தனர்.
  • இருபாலரும் மணிகளாலான ஆபரணஙங்களை அணிந்துகொண்டனர். வளையல்கள், காப்புகள், ஒட்டியாணம், சிலம்பு, காதணி, மோதிரம் போன்றவை பெண்களுக்கான ஆபரணங்கள்.
  • இவை, தங்கம், வெள்ளி, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களானவை. அரியவகை கற்களாலான ஆபரணங்களும் இருந்தன. மட்பாண்டங்கள், கற்கள்,  ஓடுகள், தந்தம் மற்றும் உலோகஙங்களாலான பல்வேறு வகையிலான வீட்டுக்குதவும் பாத்திரங்கள் மொகஞ்சாதோராவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • நூற்கும் தக்களி, ஊசிகள், சீப்புகள், தூண்டில்முட்கள், கத்திகள் போன்றவை செம்பாலானவை. களிமண்ணாலான வண்டிகள் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்களில் அடங்கும்.
  • கோலிகள், பந்துகள், தாயம் போன்றவை விளையாட்டுக்கு பயன்பட்டன. மீன் பிடித்தல் என்பது முறையான தொழில். வேட்டையாடுதலும், எருதுச் சண்டையும் பொழுதுபோக்குகளாகும்.
  • பல்வேறு போர்க்கருவிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்பு மற்றும் வெண்கலத்திலான கோடரிகள், ஈட்டிகள், குறுவாட்கள், வில் அம்புகள் போன்றவையும் இதிலடங்கும்.

கலைகள்

  • ஹரப்பாவின் சிற்பங்கள் மிகச்சிறந்த வேலைப்பாடுகளைக் கொண்டதாகும். சுடுமண்ணாலான ஆண், பெண் உருவங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் முத்திரைகளில் வரையப்பட்டுள்ள செதுக்கோவியங்கள் சிற்பியின் திறமைக்கு சான்று பகிர்கின்றன.
  • மொகஞ்சாதாரோவில் கண்டெடுக்கப்பட்டுள்ள ‘ நாட்டிய மங்கை’ என்ற வெண்கல உருவ பொம்மை சிறப்பான கலைநயத்திற்கு எடுத்துக் காட்டாகும். அதன் வலது கை இடுப்பின்மீதும், வளையல்கள் அணிந்த இடது கை தொங்கவிடப்பட்ட நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
  • ஹரப்பாவில் இரண்டு கற்சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்று மனிதனின் பின்பக்க வாட்டிலும், மற்றது நாட்டிய வடிவிலும் அமைந்துள்ளன.
  • ஹரப்பா நகர மட்பாண்டங்கள் சிறந்த கலைநயமிக்கவையாகும் மட்பாண்டங்களும், குவளைகளும் பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன.
  • வண்ணப்பூச்சுடன்கூடிய மட்பாண்டங்கள் தரமிக்கவையாகும். கோணவடிவிலான கோடுகள், வட்டங்கள், இலைகள், செடிகள், மரங்கள் போன்ற ஓவியங்கள் மட்பாண்டங்கள்மீது வரையப்பட்டுள்ளன. சில மட்பாண்டங்களில் மீன் மற்றும் மயில் உருவங்களும் காணப்படுகின்றன.

எழுத்து

  • ஹரப்பா எழுத்து வடிவம் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை. 400 முதல் 600 வரையிலான வடிவங்கள் இருப்பினும், அவற்றில் 40 அல்லது 60 மட்டுமே அடிப்படையாக விளங்குகின்றன.
  • எஞ்சியவை அவற்றின் மாற்றுவடிவங்களே. ஹரப்பா எழுத்துக்கள் பொதுவாக வலமிருந்து இடமாகவே எமுதப்பட்டுள்ளன.
  • ஒருசில முத்திரைகளில் முதல்வரி வலமிருந்து இடமாகவும், அடுத்தவரி இடமிருந்து வலமாகவும் மாறிமாறி எமுதப்பட்டுள்ளன.
  • ஸ்கான்டிநேவியாவைச் சேர்ந்த பார்போலா மற்றும் அவரது உடன்பணியாற்றும் அறிஞர்களும் ஹரப்பா மக்களின் மொழி திராவிடமொழியே என்று முடிவு செய்துள்ளனர்.
  • சோவியத் அறிஞர் சிலரும் இக்கருத்தை ஏற்கின்றனர். வேறுசில அறிஞர்கள் ஹரப்பா எமுத்துக்களை பிராமி எமுத்துவகையுடன் தொடர்புப்படுத்துகின்றனர். ஹரப்பா எமுத்து பற்றிய புதிர் இன்னும் அவிழ்க்கப்படவில்லை
  • ஹரப்பா எழுத்து முழுவதும் படித்தறியப்படும்போது அப்பண்பாட்டின் சிறப்புகள் முழுமையாக வெளிவரும் என்பதில் ஐயமில்லை

சமயம்

  • முத்திரைகள், சுடுமண் உருவங்கள் மற்றும் செப்புவில்லைகள் போன்ற சான்றுகளிலிருந்து ஹரப்பா மக்களின் சமய வாழ்க்கை குறித்து அறியமுடிகிறது.
  • அவர்களது முக்கிய ஆண் கடவுள் பசுபதி (முற்காலத்திய சிவன்). தியான வடிவில் அமர்ந்திருக்கும் அவருக்கு மூன்று முகங்களும் இரண்டு கொம்புகளும் காணப்படுகின்றன.
  • நான்கு விலங்குகள் (யானை, புலி, நீர்யானை, எருது) வௌவேறு திசைகளைப்பார்த்த வண்ணம் அவரை சூழ்ந்துள்ளன. அவரது பாதத்தில் இரண்டு மான்கள் உள்ளன.
  • இந்த உருவம் முத்திரைகளில் காணப்படுகிறது. அவர்களது முக்கிய பெண் கடவுள் தாய்க் கடவுளாகவும். இதன் சுடுமண் வடிவங்கள் கிடைக்கின்றன. பிற்காலத்தில் லிங்க வழிபாடும் காணப்பட்டது.
  • ஹரப்பா மக்கள் மரங்களையும் விலங்குகளையும் கூட வழிபட்டனர். பேய்கள்,  கெட்ட ஆவிகள் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்த அவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தாயத் துக்களையும் அணிந்தனர்.

ஹரப்பா பண்பாட்டின் அழிவு

  • ஹரப்பா பண்பாட்டின் அழிவு குறித்தும் அதற்கான சான்றுகள் குறித்தும் அறிஞர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை.
  • பொதுவாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வெள்ளப் பெருக்கு,  நதிகள் வறண்டுபோடுதல், விளைநிலம் தனது வளத்தை இழத்தல், அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஹரப்பா நகரங்க -ளின் அழிவுக்கு காரணங்களாக இருந்திருக்கக்கூடும்.
  • ஆரியர்களின் படையெடுப்பு ஹரப்பா நாகரிகத்திற்கு கடைசி மணியை ஒலித்தது என்பது ஒரு சில அறிஞர்களின் கருத்தாகும். கோட்டைகள் பல அழிக்கப்பட்டது குறித்து ரிக்வேதம் குறிப்பிடுகிறது.
  • மேலும், மொகஞ்சாதோராவில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்குவியல் அந்நகரம் அயலவரின் படையெடுப்புக்கு ஆளானதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
  • ஆரியர்களிடம் வலிமைமிக்க ஆயுதங்களும், வேகமாக செல்லக்கூடிய குதிரைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், அவர்கள் சிந்து வெளிப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை எளிதாக ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

PDF Download

TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!