டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா

0

டெல்லி சுல்தானியத்தின் கீழ் இந்தியா

டெல்லி சுல்தானியம் நிறுவப்பட்டு, நன்கு விரிவடைந்தபோது வலிமையும், திறமையும் மிக்க ஆட்சி முறையும் வளரத் தொடங்கியது. டெல்லி சுல்தானியம் அதன் உச்ச கட்டத்தில் இருந்தபோது அதன் ஆதிக்கம் தெற்கே மதுரை வரை இருந்தது. டெல்லிp சுல்தானியம் வீழ்ச்சியடைந்த பிறகுகூட, அதன் ஆட்சி முறைக் கூறுகள் பிராந்திய அரசுகளிலும். பின்னர் முகலாயர் ஆட்சி முறையிலும் காணப்பட்டன. இஸ்லாமிய சமயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாக டெல்லி சுல்தானியம் விளங்கியது. டெல்லி சுல்தான்கள் தங்களை காலிப்புகளின் பிரதிநிதிகளாக கருதிக் கொண்டனர். குத்பா என்ற வழிபாட்டு சடங்கின்போதும், நாணயங்களிலும் காலிப்பின் பெயர் இடம் பெற்றது. பால்பன் தம்மை கடவுளின் நிழல் என்று கூறிக் கொண்டாலும், நாணயங்களில் காலிப்பின் பெயரை பொறிக்கத் தவறில்லை. இல்துத்மிஷ், முகமது பின் துக்ளக், பிரோஸ் துக்ளக் ஆகியோர் காலிப்பிடமிருந்து அனுமதிக் கடிதங்களையும் பெற்றனர். ஆட்சி முறையில் சுல்தானின் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராணுவம், சட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் அவரே இறுதி முடிவுகளை எடுத்தார். அக்காலத்தில் தெளிவான வாரிசுரிமை முறை காணப்படவில்லை. அனைத்து ஆண்மக்களும் அரியணைக்குப் போட்டியிட்டனர். இல்துத் மிஷ் தனது புதல்வர்களை விட்டுவிட்டு மகள் ரசியாவை தனது வாரிசாக நியமித்தார். ஆனால், வாரிசுகளும், வாரிசுக்கான நியமினங்களும் உயர்குடியினரின் ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது. அரியணைக்கு வாரிசுகளை நியமிப்பதில் சில சமயங்களில் உலேமாக்களும் முக்கிய பங்கு வகித்தனர். இருப்பினும், ராணுவ வலிமையே, வாரிசுரிமைப் போட்டியின்போது முக்கிய காரணியாக இருந்தது.

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

மத்திய அரசாங்கம்

  • ஆட்சித் துறையில் சுல்தானுக்கு உதவியாக பல்வேறு துறைகளும் அதிகாரிகளும் இருந்தனர். நாயப் என்ற பதவி மிகுந்த அதிகாரமுள்ளதாகும்.
  • சுல்தானைப் போல அனைத்து அதிகாரங்களையும் பெற்று விளங்கிய நாயப் அனைத்து துறைகளையும் தமது பொதுவான கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவருக்கு அடுத்த நிலையில் திவானி விசாரத் என்ற நிதித் துறைக்குப் பொறுப்பான வாசிர் என்ற அதிகாரி இருந்தார்.
  • ராணுவத் துறை திவானி அர்ஸ் என அழைக்கப்பட்டது.
  • அரிஸ் – இ – முமாலிக் என்ற அதிகாரி அதன் தலைவர். படைவீரர்களை சேர்ப்பதும், ராணுவத்துறையை நிர்வகிப்பதும் அவரது பொறுப்பாகும். அவர் படைத்தளபதி அல்ல என்பதை குறிப்பிடவேண்டும். சுல்தானே படைக்குத் தளபதி ஆவார்.
  • பால்பன் ஆட்சிக் காலத்தில்தான் படைத்துறை உருவாக்கப்பட்டது. படையின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டிய அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில் அத்துறை மேலும் விரிவுப்படுத்தப்பட்டது.
  • குதிரைகளுக்கு சூடுபோடும் முறையையும், வீரர்களுக்கான ஊதியத்தை பணமாக வழங்கும் முறையையும் அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார்.
  • டெல்லி சுல்தானியத்தில் குதிரைப் படைக்கு முக்;கியத்துவம் அளிக்கப்பட்டது.
  • திவானி ரிசாலத் என்பது சமய விவகாரங்கள் துறை. அதன் தலைவர் சதர் என்ற அதிகாரி.
  • மசூதிகள், கல்லறைகள் மற்றும் மதரசாக்கள் கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் அந்த துறை மானியங்களை வழங்கியது. நீதித்துறையின் தலைவராக தலைரமைக் காஸி இருந்தார். சுல்தானியத்தின் பல்வேறு பகுததிகளிலும் காஸிகள் அல்லது நீPதிபதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
  • உரிமையியல் குறித்த வழக்குகளில் இஸ்லாமிய தனி நபர் சட்டம் அல்லது ஷாரியா பின்பற்றப்பட்டது. இந்துக்களுக்கு அவர்களது தனிச் சட்டத் வழக்கிலிருந்து. அவர்களது வழக்குகளை பெரும்பாலும் கிராம பஞ்சாயத்துக்களே தீர்த்து வைத்தன.
  • கிரிமினல் சட்டங்களைப் பொறுத்தவரை, அவ்வப்போது சுல்தான்கள் வெளியிடும் ஆணைகளும், விதிமுறைகளும் சட்டங்களாக பின்பற்றப்பட்டன.
  • திவானி இன்ஷா என்பது போக்குவரத்துத் துறை. ஆட்சியாளருக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான கடிதப் போக்குவரத்துகளை அது கவனித்து வந்தது.

உள்ளாட்சி நிர்வாகம்

  • டெல்லி சுல்தானியத்தில் மாகாணங்கள் இக்தாக்கள் எனப்பட்டன. தொடக்;கத்தில் அவை உயர்குடியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆனால், மாகாண ஆளுநர்கள் முக்திகள் அல்லது வாலிஸ் என்று அழைக்கப்பட்டனர்.
  • சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது. நிலவரி வசூலிப்பது அவர்களது முக்கிய பணியாகும்.
  • மாகாணங்கள்  ஒவ்வொன்றும் ஷிக்தா என்ற மாவட்டங்களாகவும், ஷிக்தா ஒவ்வொன்றும் பல பர்கானாக்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
  • ஷிக்தாரின் ஆட்சியாளர் ஷிக் எனப்பட்டார்.
  • பர்கானா ஒவ்வொன்றிலும் பல கிராமஙங்கள் இருந்தன.
  • கிராமத்தின் தலைவர் அமில்.
  • ஆட்சியின் அடிப்படை அலகு கிராமம் . கிராம கணக்கர் பட்வாரி என்பவராவார்.

பொருளாதாரம்

  • இந்தியாவில் தங்களது ஆட்சிரய ஒருங்கிணைத்த பிறகு, டெல்லி சுல்தான்கள் நில வருவாய் நிர்வாகத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர். நிலங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டன.
  • இக்தா – அதிகாரிகளுக்கு ஊதியத்திற்குப் பதிலாக அளிக்கப்பட்ட மான்யங்கள்
  • காலிசா – சுல்தானின் நேரடி நிர்வாகத்தில் இருந்த நிலங்கள். அதிலிருந்து பெறப்பட்ட வருவாய் அரசவை செலவினங்களுக்கு பயன்படுத்தப்பட்டது.
  • இனாம் – சமயத் தலைவர்களுக்கும் – சமய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்.
  • பொதுவாக விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கை குடியானவர்கள் வரியாக செலுத்தினர். சில சமயம் விளைச்சலில் சரிபாதிகூட வசூலிக்கப்பட்டது.
  • வேறு பல வரிகளையும் அவர்கள் கட்ட வேண்டியிருந்த தால் வறுமை நிறைந்த வாழ்ககையையே அவர்கள் வாழ வேண்டியதாயிற்று. அடிக்கடி தோன்றிய பஞ்சங்களால் அவர்களது நிலைமை மேலும் மோசமடைந்தது. இருப்பினும், முகமது பின் துக்ளக், பிரோஸ் துக்ளக் போன்ற சுல்தான்கள் நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்தும் தக்காவிக் கடன்களை வழங்கியும் வேளாண் உற்பத்தியைப் பெருக்க முயற்சித்தனர்.
  • பார்லிக்குப் பதில் கோதுமை போன்ற உயர்ந்தரக பயிர்களை பயிரிடும்படி அவர்கள் குடியானவர்களை ஊக்குவித்தனர்.
  • பிரோஸ் தோட்ட பயிர்களை ஊக்குவித்தார். முகமது பின் துக்ளக், திவானி கோஹி என்று தனியாக ஒரு வேளாண் துறையை ஏற்படுத்தினார்.
  • சுல்தானியர்கள் காலத்தில் நகர மயமாக்கம் மேலும் சூடுபிடித்தது. ஏராளமான பெருநகரங்களும், நகரங்களும் வளர்ச்சியடைந்தன.
  • லாகூர், முல்தான், புரோச், அன்ஹில்வாரா, லக்னௌதி, தௌலதாபாத், டெல்லி, ஜான்பூர் என்பவை அவற்றில் குறிப்பிடத்;தக்கவை. கீழை உலகில் டெல்லி மிகப்பெரிய நகரமாக விளங்கியது. அக்காலத்திய வாணிக வளர்ச்சி பற்றி சமகால எழுத்தாளர்கள் விவரித்துள்ளனர்.
  • பாரசீக வளைகுடாப் பகுதி, மேற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் போன்றவற்றுக்கு ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • முல்தானிகள் மற்றும் ஆப்கானிய முஸ்லிம்கள் கடல்கடந்த வாணிகத்தைக் கட்டுப்படுத்தினர்.
  • குஜராத் மார்வாரிகளும், முஸ்லிம் போரா வணிகர்களும் உள்நாட்டு வாணிபத்தில் சிறந்து விளங்கினார்.
  • சாலைகள் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டதால் போக்குவரத்து செய்தித் தொடர்பு எளிமையாக இருந்தன. குறிப்பாக அரசப் பெருவழிகள் நல்ல முறையில் இருந்தன.
  • பெருவழித் தடங்களில் பயணிகள் இளைப்பாறுவதற்காக ஆங்காங்கே தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
  • அக்காலத்தில் பருத்தி மற்றும் பட்டுத் துணிகள் உற்பத்தி வளர்ச்சி பெற்றது. பட்டுப் புழு வளர்ப்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால் பிற நாடுகளிலிருந்து கச்சாப்பட்டு இறக்குமதி செய்வது குறைந்தது.
  • காகித உற்பத்தியும் வளர்ந்தது. 14 மற்றும் 15 நூற்றாண்டுகளிலிருந்தே காகிதம் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. தோல் பொருட்கள், உலோகப் பொருட்கள், கம்பள விரிப்புகள் போன்ற பிற தொழில்களும் நன்கு வளர்ச்சியடைந்தன.
  • சுல்தான் மற்றும் அவரது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அரசருக்கு சொந்தமான கர்கானாக்களில் (தொழிற்சாலைகளில்) உற்பத்தி செய்யப்பட்டன. தங்கம், வெள்ளியிலான விலையுயர்ந்த பொருட்களும் தங்க ஆபரணங்களும் அங்கு உற்பத்தியாகின.
  • சுல்தான்களைப் பின்பற்றி உயர்குடியினரும் ஆடம்பர வாழ்வில் ஈடுப்பட்டனர். அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்பட்டதால், செல்வத்தை ஏராளமாக சேர்த்தனர்.
  • டெல்லி சுல்தானிய ஆட்சிக் காலத்தில் நாணய முறையும் நன்கு வளர்ச்சி பெற்றது. இல்துத்மிஷ் பலவகையான வெள்ளி தாங்காக்களை வெளியிட்டார்.
  • கில்ஜிகள் காலத்தில் ஒரு வெள்ளி தாங்கா என்பது 48 ஜிடால்களைக் கொண்டதாகும். துக்ளக் ஆட்சிக் காலத்தில் அது 50 ஜிடால்களாக இருந்தது.
  • அலாவுதீன் கில்ஜியின் தென்னிந்தியப் படையெடுப்புக்குப் பிறகு, தினார் எனப்படும் தங்க நாணயங்களை புகழ்பெற்று விளங்கின.
  • செப்பு நாணயங்கள் மிகக் குறைவாகவும், தேதிகள் இன்றியும் காணப்படுகின்றன. முகமது பின் துக்ளக் அடையாள நாணய முறையை பரிசோதித்ததோடு தங்கம், வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டார். அவை எட்டு வௌ;வேறு தங்கசாலைகளில் வார்க்கப்பட்டன.
  • குறைந்தது 25 வகைப்பட்ட தங்க நாணயங்கள் அவரால் வெளியிடப்பட்டன.

சமூக வாழ்க்கை

  • டெல்லி சுல்தானியர் காலத்தில் இந்து சமுதாய அமைப்பில் ஒருசில மாறுதல்கள் காணப்பட்டன. சமுதாயத்தில் பிராமணர்கள் உயர்ந்த இடம் வகித்த பரம்பரை ஜாதிமுறை வழக்கத்திலிருந்தது. மகளிர் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர்.
  • ‘சதி’ வழக்கமும் நடைமுறையிலிருந்தது. உயர் வர்க்க பெண்களிடையே பர்தா என்ற முகத்திரை அணியும் வழக்கமும், தனித்திருக்கும் வழக்கமும் காணப்பட்டது.
  • இந்தியாவில் அராபியரும், துருக்கியரும் பர்தா முறையை அறிமுகப்படுத்தினர். பின்னர், வடஇந்தியாவில் உயர்ஜாதி இந்துப் பெண்களிடையே அவ்வழக்கம் பரவியது.
  • சுல்தானியர் காலத்தில் சமுதாயம் பல்வேறு இனங்களாக பிரிந்து கிடந்தது. துருக்கியர், ஈரானியர், ஆப்கன்கள், இந்திய முஸ்லிம்கள் தத்தம் தனிப்பட்ட அடையாளங்களை தக்கவைத்துக் கொண்டனர். அவர்களுக்கிடையே கலப்பு மணம் நடைமுறையில் இல்லை. கீழ்சாதியிலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்கள் சம அந்தஸ்துடன் நடத்தப்படவில்லை.
  • முஸ்லிம் உயர்குடியினருக்கு அளிக்கப்பட்ட உயர் பதவிகள் இந்து உயர்குடியினருக்கு மறுக்கப்பட்டன. இந்துக்கள் ‘சிம்மிக்கள்’ அல்லது பாதுகாக்கப்பட்ட குடிகள் எனக் கருதப்பட்டனர். அவர்கள் ஜிசியா வரியை கட்டாயம் செலுத்த வேண்டியிருந்தது.
  • தொடக்கத்தில் நிலவரியுடன் சேர்த்து ஜிசியா வரி வசூலிக்கப்பட்டது. பிரோஸ் துக்;ளக் அதைத் தனியாகப் பிரித்து, ஜசியா வரியை தனியாக வசூலிக்க நடவடிக்கை எடுத்தார். சில சமயங்களில் பிராமணர்களுக்கு ஜிசியா வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

கலை, கட்டிடக்கலை

  • டெல்லி சுல்தானியத்தின் கலை, கட்டிடக்கலை, இந்தியப் பாணியிலிருந்து மாறுபட்டிருந்தது. வளைவுகள், குவிமாடங்கள், உயர்ந்த கோபுரங்கள் அல்லது மினாரட்டுகள் அராபிய எழுத்துக்களாலான அலங்கார வடிவமைப்புகள் போன்றவற்றை துருக்கியர்கள் அறிமுகப்படுத்தினர். இந்திய சிற்பிகளின் திறமைகளை அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். சிகப்பு, மஞ்சள் நிறங்களாலான பளிங்குக் கற்களையும், மணற்பாறைகளையும் பயன்படுத்தி கட்டிடங்களை அவர்கள் பல வண்ணங்களில் அமைத்தனர்.
  • தொடக்கத்தில் கோயில்களையும் பிற கட்டிடங்களையும் உடைத்து அவற்றை மசூதிகளாக மாற்றியமைத்தனர். எடுத்துக்காட்டாக, டெல்லி குதுப்மினாருக்கு அருகிலுள்ள குவாத் உல் இஸ்லாம் மசூதி பல்வேறு இந்து மற்றும் சமணக் கோயில்களை அழித்து அந்தப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டதாகும். ஆனால், பின்னர் புதிய கட்டிடங்களையும் அவர்கள் கட்டத் தொடங்கினர்.
  • பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பிராமாண்டமான கட்டிடம் குதுப்மினார். அது ஐபக்கால் தொடங்கப்பட்டு இல்துத்மிஷால் கட்டி முடிக்கப்பட்டது.
  • எழுபத்தியொரு மீட்டர் உயரமுள்ள அந்த கோபுரம் சூஃபித் துறவி குத்புதூன் பக்தியார் காகி என்பவரது நினைவாக எழுப்பப்பட்டது.
  • கட்டிடத்திலிருந்து சற்று வெளியே நீட்டப்பட்டுள்ள பார்வையாளர் மாடங்கள் அக்கால கட்டிடக் கலையின் சிறப்புக்கு சான்றாகத் திகழ்கின்றன.
  • பின்னர், குதுப்மினாருக்கு அலாவுதீன் கில்ஜி அலை தர்வாசா என்ற நுழைவாயிலை அமைத்தார். அதன் குவிமாடம் அறிவியல் பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • வளைவுகளும் குவிமாடங்களும் கலந்து கட்டப்பட்ட கட்டிட அமைப்புகளை துக்ளக்குகள் உருவாக்கினர்.
  • விலை குறைவானதும்; எளிதாக கிடைக்கக் கூடியதுமான சாம்பல் நிலப் பாறைக் கற்களையும் அவர்கள் பயன்படுத்தினர்.
  • கியாசுதீன் துக்ளக் காலத்தில் துக்ளகாபாத் அரண்மனை வளாகம், அதனுள் அமைந்துள்ள அழகிய ஏரி ஆகியன அமைக்கப்பட்டன.
  • உயர்ந்த மேடைமீது கியாசுதீனின் கல்லறையை முகமது பின் துக்ளக் அமைத்தார். டெல்லியிலுள்ள கோட்லா கோட்டை பிரோஸ் துக்ளக்கின் படைப்பாகும்.  லோடிகளின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாக டெல்லியிலுள்ள லோடி தோட்டங்களைக் கூறலாம்.

இசை

  • சாரங்கி, ரபாப் போன்ற புதிய இசைக் கருவிகள் அக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. கோரா, சானம் போன்ற பல புதிய ராகங்களை அமிர் குஸ்ரு அறிமுகம் செய்தார்.
  • இந்து மற்றும் ஈரானிய முறைகளை ஒன்றிணைத்து குவாலிஸ் என்ற புதிய வகை மெல்லிசைகளையும் அவர் உருவாக்கினார். சிதார் இசைக் கருவியும் அவரது கண்டுபிடிப்பே என்றும் கூறுவர்.
  • பிரோஸ்  துக்ளக் ஆட்சிக் காலத்தில் ராகதர்பன் என்ற இந்திய இசைநூல் பாரசீக மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது.
  • பீர்போதன் என்ற சூஃபித்துறவி அக்காலத்திய புகழ்மிக்க இசைமேதைகளில் ஒருவர்.
  • குவாலியரைச் சேர்ந்த ராஜா மன்சிங் சிறந்த இசைப்பிரியர். மன் கவுத்துகல் என்ற இசை நூல் தொகுக்கப்படுவதற்கு அவர் பெரும் ஊக்கமளித்தார்

இலக்கியம்

  • டெல்லி சுல்தான்கள் கல்வி, இலக்கியத்தையும் போற்றி வளர்த்தனர். அவர்களில் பலர் அராபிய மற்றும் பாரசீக மொழிகளை நேசிப்பவர்களாக இருந்தனர்.
  • பாரசீகத்திலிருந்து பல அறிஞர்கள் இந்தியாவிற்கு வந்தனர். ஆட்சியாளர்கள் பாரசீக மொழியை பெரிதும் ஊக்குவித்தனர்.
  • சமயவியல், கவிதை தவிர வரலாறு எழுவதையும் அவர்கள் பெரிதும் ஆதரித்தனர். ஒருசில சுல்தான்களின் அரசவையில் வரலாற்று அறிஞர்களும் இடம் பெற்றிருந்தனர்.
  • ஹசன் நிசாமி, மின்    ஹஜ் – உஸ் – சிராஜ், சியாவுதீன் பரானி, ஹம்ஸ் – சிராஜ் அபிப் ஆகியோர் அக்காலத்தில் புகழ்மிக்க வரலாற்று அறிஞர்கள்  துக்ளக் வம்சத்தின் வரலாற்றை பரானி, தாரிகி பிரோஸ் ஷாஹி என்ற பெயரில் எழுதினார்.
  • 1260 ஆண்டு வரையிலான முஸ்லிம் அரச குலங்களின் வரலாற்றை தபாகத் – இ – நசாரி என்ற பெயரில் மின்ஹஜ் – உஸ் – சிராஜ் எழுதினார்.
  • அமிர்குஸ்ரு அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த பாரசீக அறிஞர். ஏராளமான பாடல்களை எழுதியுள்ள அவர், பல்வேறு கவிதை வடிவங்களை பரிசோதித்து, சபாக் – இ – இந்த் என்ற இந்தியப் பாணியிலான பாரசீக கவிதை வடிவத்தை உருவாக்கினார்.
  • சில இந்திப் பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். அமிர் குஸ்ரு அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகளைக் கூறும் காசெய்ன் – உல் – ஃபுரூ என்ற நூலையும் எழுதியுள்ளார். அவரது புகழ்பெற்ற நூலான துக்ளக் நாமா கியாசுதீன் துக்ளக்கின் எழுச்சியை விவரிக்கிறது.
  • வடமொழியும்,  பாரசீக மொழியும் டெல்லி சுல்தானியத்தின் இணைப்பு மொழிகளாகத் திகழ்ந்தன. வடமொழிக் கதைகள் பலவற்றை பாரசீக மொழியில் முதன்முதலில் மொழிபெயர்த்தவர் நக் ஷபி.
  • துது நாமா அல்லது கிளிமொழி என்ற புகழ்பெற்ற நூல் துருக்கி மொழியிலும் பின்னர் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது.
  • காஷ்மீர் அரசர் ஜெயினுலாபதீன் ஆட்சிக் காலத்தில் கல்ஹணர் ராஜதரங்கிணியைப் படைத்தார். பல்வேறு மருத்துவம் மற்றும் இசை தொடர்பான நூல்களும் பாரசீக மொழியில் மொழியாக்கம் பெற்றன.
  • அல்பரூனி எழுதிய கிதாப் – உல் – இந்த் அராபிய மொழியில் படைக்கப்பட்ட புகழ்பெற்ற நூலாகும். பிராந்திய மொழிகளும் அக்காலத்தில் வளர்ச்சியடைந்தன.
  • சந்த் பராடி அக்காலத்திய சிறந்த இந்திக் கவிஞர். வங்காள இலக்கியமும் வளர்ச்சியடைந்தது. நுஸ்ரத் ஷா மகாபாரத்;தை வங்காளத்தில் மொழிபெயர்ப்பதற்கு உறுதுணையாக இருந்தார்.
  • குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் வளர்வதற்கு பக்தி இயக்கம் வழிவகுத்தது. விஜயநகரப் பேரரசு தெலுங்கு மற்றும் கன்னட மொழி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு உதவியது.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!