தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (31.08.2021) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள திமுக அரசு மின்சாரத் துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மின் கட்டணம் மாதந்தோறும் வசூலிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். மேலும் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத் துறையினர் அனைத்து பகுதிகளிலும் உள்ள மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக மின்தடை செய்யப்பட்டு வந்தது. கடந்த ஜூன் 28ம் தேதியுடன் இந்த பராமரிப்பு பணிகள் முடிவு பெற்றது.
Airtel, Jio மற்றும் Vi ன் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!
அதன் பிறகு ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து மின் நிலையங்களில் வழக்கமாக செய்யப்படும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் துவங்கியது. அதன்படி அனைத்து பகுதிகளிலும் முன் அறிவிப்புடன் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள திருப்புவனம் துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதனால் லாடனேந்தல், பாப்பக்குளம், திருப்பாச்சேத்தி, மழவராயனேந்தல், ஆவரங்காடு, மாரநாடு, சல்பனோடை, அச்சகுளம், பழையனூர், பிரமனூர், சத்திய நகர், மீனாட்சிபுரம், மாங்குடி, மடப்புரம், அல்லிநகரம், வெள்ளக்கரை, தட்டான் குளம், பொட்டபாளையம், பூவந்தி, ஆனைக்குளம் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (31.08.2021) சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என சிவகங்கை மின் பகிர்மான மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.