தமிழக மக்களே உஷார்.. ஆகஸ்ட் 3 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழக மக்களே உஷார்.. ஆகஸ்ட் 3 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் - வானிலை அறிக்கை!
தமிழக மக்களே உஷார்.. ஆகஸ்ட் 3 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் - வானிலை அறிக்கை!
தமிழக மக்களே உஷார்.. ஆகஸ்ட் 3 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று கோயம்புத்தூர்‌, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. நாளை கோயம்புத்தூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

01.08.2021 முதல்‌ 03.08.2021 வரை மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்கூடும்‌.

தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இலேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும்‌, அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

30.07.2021: தென்‌ மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு இலங்கை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

30.07.2021 , 31.07.2021: வட மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

30.07.2021 முதல்‌ 03.08.2021 வரை: கர்நாடக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

30.07.2021 முதல்‌ 03.08.2021 வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!