Airtel, Jio மற்றும் Vi ன் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!

0
Airtel, Jio மற்றும் Vi ன் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் - முழு விவரம் இதோ!
Airtel, Jio மற்றும் Vi ன் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் - முழு விவரம் இதோ!
Airtel, Jio மற்றும் Vi ன் ரூ.500க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டம் – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.500க்கும் குறைவான, 56 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் சில திட்டங்களை அளித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடாபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்கான சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை அளிக்கிறது. அந்த வகையில் இந்நிறுவனங்கள் வழங்கும் ரூ.500 க்கும் குறைவான சில ப்ரீபெய்ட் திட்டங்களை தினசரி 1.5 GB மற்றும் 2 GB டேட்டாவுடன் வழங்குகிறது. இந்த திட்டங்கள் 56 நாட்கள் அல்லது 84 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கப்படுகின்றன. இதனுடன் ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ மற்றும் வோடாபோன் ஆகியவை, சில வருடாந்திர சலுகைகள் அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான அணுகலையும் வழங்குகின்றன.

தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளிகள் திறக்க அனுமதி? முதல்வர் இன்று ஆலோசனை!

தற்போது ரூ.500 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் அதன் டேட்டா அளவு, இலவச அணுகல் குறித்த விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஏர்டெலின் ரூ .399 ப்ரீபெய்ட் திட்டம், அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS உடன் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இது தவிர ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஏர்டெல்லின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS களை 56 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் கொடுக்கிறது.

ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

மேலும் பயனர்களுக்கு பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான சந்தாவையும் வழங்குகிறது. அடுத்ததாக ஜியோவின் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவையும் வழங்குகிறது. அடுத்ததாக Vi ன் ரூ. 269 ப்ரீபெய்ட் திட்டம், 4 நாட்களுக்கு 4 ஜிபி டேட்டா அளவுகளுடன், அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 600 SMS ஆகியவற்றை 56 நாட்களுக்கு வழங்குகிறது. இது பயனர்களுக்கு Vi Movies மற்றும் TV க்கான அணுகலையும் இலவசமாக வழங்குகிறது.

தமிழகத்தில் கூடுதலாக 3000 அரசு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு!

Vi ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம், தினசரி 1.5 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ், 100 SMS களை Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலுடன் வார இறுதி ரோல்ஓவர் டேட்டா நன்மைகளுடன் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் இரவுநேர சலுகை அதிகம் உள்ளது. மேலும் vi பயன்பாட்டின் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது 5 ஜிபி கூடுதல் டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது. இறுதியாக Vi ன் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் இரட்டை தரவு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டுள்ளது. இது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 4 ஜிபி தினசரி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS களை அளிக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!