Post Office ல் மாதம் ரூபாய் 2,500 ரிட்டன்ஸ் பெறும் சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!

0
Post Office ல் மாதம் ரூபாய் 2,500 ரிட்டன்ஸ் பெறும் சேமிப்பு திட்டம் - முழு விவரங்கள் இதோ!
Post Office ல் மாதம் ரூபாய் 2,500 ரிட்டன்ஸ் பெறும் சேமிப்பு திட்டம் - முழு விவரங்கள் இதோ!
Post Office ல் மாதம் ரூபாய் 2,500 ரிட்டன்ஸ் பெறும் சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலகங்கள் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதைய கால கட்டத்தில் மக்கள் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையான சேமிப்பு திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.

சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள் நல்ல முதலீட்டை அளித்து வருகிறது. மேலும் இத்திட்டங்களில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி சலுகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் அதிகளவு மக்கள் அஞ்சலகத்தில் தான் சேமிப்பு திட்டம் தொடங்க ஆர்வம் காண்பிக்கின்றனர். அதற்கு காரணம் அதிக லாபம், மற்றொன்று பாதுகாப்பான முதலீடு ஆகும். தற்போது அஞ்சலகத்தில் நடைமுறையில் உள்ள மாதாந்திர சேமிப்பு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதாவது 10 வயதை கடந்த குழந்தையின் பேரில் கூட தனி கணக்கு தொடங்கலாம்.

Exams Daily Mobile App Download

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 6.6 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் பிக்சட் டெபாசிட் திட்ட வட்டி விகிதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சேர குறைந்தபட்ச தொகை ரூ.1000 ஆகும். ஒரு கணக்கிற்கு அதிகப்பட்ச முதலீடு ரூ.4.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் கூட்டு கணக்கிற்கு ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்யலாம். தற்போது நீங்கள் அஞ்சலத்தில் ஒரு கணக்கை தொடங்கி அதில் ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்தால் ஆண்டு வட்டி வீதத்தில் மாதந்தோறும் உங்களுக்கு ரூ.1,100 வட்டி கிடைக்கும்.

வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

அதே நேரம் குழந்தை பெயரில் அந்த கணக்கை தொடங்கினால் ரூ.3.50 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.1925 வட்டியாக கிடைக்கும். இந்த தேசிய சேமிப்பு மாதாந்திர பராமரிப்பு திட்டத்தில் உச்ச வரம்பான ரூ.4.5 லட்சம் டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.2475 வட்டியாக கிடைக்கும். மேலும் இத்திட்டத்தில் உங்களது தொகை 10 வருடத்தில் இரட்டிப்பாகும். இந்த வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த திட்டத்திற்கு 5 ஆண்டுகள் முதிர்வு காலம் அதன் பின் பாஸ்புக்கை சமர்பித்து கணக்கை மூடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!