வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

0
வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை - அறிவிப்பு வெளியீடு!
வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் முதன்மையானதாக விளங்கும் வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினம் உட்பட ஒன்பது நாட்களுக்கு விடுமுறை என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த விவரத்தை இப்பதிவில் காண்போம்.

வங்கி விடுமுறை:

நாட்டில் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப வங்கிகளின் செயல்பாடு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். மேலும், மக்களிடையே அனைத்து பண பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமாகவே நடைபெறுகிறது. குறிப்பாக, இன்றைய உலகில் நகரம் முதல் கிராமம் வரையில் உள்ள அனைத்து இடங்களிலும் வங்கிகளின் தேவை முக்கியமானதாக விளங்குகிறது. எனவே, தற்போது வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள்கள் கூட வங்கிகளை நாடி சென்று தேவையான கடன் வசதிகளை பெறுகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், இந்தியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு நிதி அளிப்பதற்கும், கடன் வழங்குவதற்கும் முக்கிய ஆதாரமாக வங்கிகள் திகழ்கிறது. இதனால் வங்கிகளை வர்த்தக செயல்பாட்டின் முதுகெலும்பு எனலாம். இதனை தொடர்ந்து வர்த்தகத்திற்கு மட்டுமின்றி கிராமத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல வகையான கடன் பெறும் வசதிகளையும் செயல்படுத்தி வருகிறது. மேலும், பயிர் உற்பத்தி கடன், வேளாண்மை கடன், கால்நடை வளர்ப்பு கடன் போன்ற நல்ல திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய வங்கிகளில் தேசிய விடுமுறைகள் தவிர மாதந்தோறும் இரண்டாம் சனிக்கிழமைகளும் மற்றும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகள் மூடப்படும்.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – 1412 காலியிடங்கள் || மாதம் ரூ.71,900 சம்பளம்

அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழா மற்றும் பண்டிகைகளை முன்னிட்டு வங்கிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை சேர்த்து மொத்தம் 6 நாட்கள் விடுமுறை இருக்கும். அது தவிர மூன்று வங்கி விடுமுறைகள் ஆகஸ்ட் 9 (செவ்வாய்க்கிழமை) முஹர்ரம், ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை) சுதந்திர தினம், ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) ஜென்மாஷ்டமி போன்றவை அடங்கும். மேலும் வங்கி விடுமுறைகள் பிராந்தியம் மற்றும் வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு வங்கிகளிலும் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளை பொறுத்து விடுமுறைகள் வேறுபடுகின்றன.

ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைகள்:

1. ஆகஸ்ட் 7 (ஞாயிறு)

2. ஆகஸ்ட் 9 ( முஹர்ரம்)

3. ஆகஸ்ட் 13 (இரண்டாவது சனிக்கிழமை)

4. ஆகஸ்ட் 14 (ஞாயிறு)

5. ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை) சுதந்திர தினம்

6. ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) ஜென்மாஷ்டமி

7. ஆகஸ்ட் 21 (ஞாயிறு)

8. ஆகஸ்ட் 27 (நான்காம் சனிக்கிழமை)

9. ஆகஸ்ட் 28 (ஞாயிறு)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!