தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு – வங்கியில் புதிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு - வங்கியில் புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் சேமிப்பு கணக்கு – வங்கியில் புதிய அறிவிப்பு!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அது பற்றிய முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்

வங்கி கணக்கு:

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு சிறு வயது முதல் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சமர்ப்பிப்பது அவசியம் ஆகும். அதன் படி 10 வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கி வரும் இந்திய தபால் துறையின் வங்கி சென்று சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம்.

இந்த வங்கி கணக்கில் இருப்புத் தொகை எதுவும் தேவையில்லை. மேலும் கணக்கு தொடங்கியதும் ஆரம்ப நிதியாக ரூ. 100 மட்டும் செலுத்த வேண்டும் . இந்த சேமிப்பு கணக்கை தொடங்க மாணவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் செல்போன் கொண்டு வர வேண்டும். கணக்கு தொடங்கப்பட்ட பின் மாணவர்களுக்கு கணக்கு எண், பெயர் விவரம், ஐ.எப்.எஸ்.சி. கோடு : IPOS0000001, எம்.ஐ.சி.ஆர். கோடு : 627768004 போன்ற விவரங்கள் வழங்கப்படும் அதை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகத்தில் முட்டை விலை அதிரடி உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மாணவர்களின் வங்கி கணக்கு சமர்ப்பிக்கும் இணையதளத்தில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கியின் விவரங்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் மூலமாக மாணவர்களின் விவரங்களை எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும். பள்ளிகளில் மாணவர்களுக்கு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடு செய்தால், தபால் துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரடியாக வந்து அதிக மாணவர்களுக்கு கணக்கு தொடங்கி கொடுப்பார்கள். இந்த வங்கி சேவைகள் உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!