தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – ஜன.28 இல் நேர்காணல்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - ஜன.28 இல் நேர்காணல்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு - ஜன.28 இல் நேர்காணல்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தோருக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – ஜன.28 இல் நேர்காணல்!

தமிழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதையடுத்து கோவை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி முகவர் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நேர்முகத் தேர்வு

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதையடுத்து கோவை அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டுக்கு நேரடி முகவர் பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை நேர்முக தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நேர்முக தேர்வு கூட்செட் ரோடு, கோவை தலைமை அஞ்சல் நிலையம், கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மத்திய அரசில் 10, 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – சம்பளம் ரூ.32,000! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இப்பணியிடத்தில் பணிபுரிய 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். அத்துடன் மத்திய, மாநில அரசு பணியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களும் அதிகாரிகளும் இந்த நேர்முகத் தேர்வுக்கு கலந்து கொள்ளலாம். அத்துடன் இவர்கள் 65 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பெற்று தேவையான சான்றிதழ்களுடன் ஜனவரி 28ம் தேதி அன்று காலை 10 மணிக்கு தலைமை அஞ்சல் நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

ஜனவரி 21 முதல் 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் விடுமுறை | அரசு அறிவிப்பு!

இதற்கான விண்ணப்ப படிவங்களை இலவசமாக [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் விண்ணப்ப படிவங்களை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் பெற்று கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 0422- 255 8541 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் வேலையில்லா பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோவை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் கோபாலன் அவர்கள் கேட்டு கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!