தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – நாளை கடைசி தேதி!

0
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - நாளை கடைசி தேதி!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - நாளை கடைசி தேதி!
தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – நாளை கடைசி தேதி!

தூத்துக்குடி மாவட்டம் கோவிப்பட்டி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபட்டு வருகிறது. இது குறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆயுள் காப்பீடு முகவர்:

தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து தவறாது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் படித்த ஏராளமான இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சல் நிலையங்களும் வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகின்றன.

சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் கவனத்திற்கு – டிச.31 முதல் மீண்டும் அனுமதி!

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் வேலைவாய்ப்பற்ற, சுயதொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீட்டு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – முழு விபரம் இதோ!

இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் ஆயுள் காப்பீடு முகவர் 5 ஆயிரம் ரூபாயை காப்பீடு தொகையை சேமிப்பு பத்திர வடிவில் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். இந்த தொகையானது ஏஜென்சி காலம் முடியும் போது தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பெற்று டிசம்பர் 27ம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோவில்பட்டி கோட்டம் – 628501 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!