தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – டிச.10 நேர்காணல்!

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - டிச.10 நேர்காணல்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு - டிச.10 நேர்காணல்!
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு – டிச.10 நேர்காணல்!

சேலம் அஞ்சல் கோட்டத்தில், ஆயுள் காப்பீடு நேரடி முகவருக்கான நேர்காணல் வரும் நவம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்:

தமிழகத்தில் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அரசு கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு பொது மக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.

முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து, 13 பேர் உயிரிழப்பு – கள நிலவரம்!

அரசும் மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அஞ்சல்துறை வேலை வாய்ப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சேலம் அஞ்சல் கோட்டத்தில், ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த பணிக்கான நேர்காணல் டிசம்பர் 10ம் தேதி காலை 11 முதல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

இப்பணிக்கு சேர விரும்புவோர்கள் 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு 18 முதல் 50 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். முன்னாள் முகவர், படை வீரர், ஓய்வு பெற்ற ஆசிரியர், சுய தொழில் செப்வர்கள் மேலும் வேலை நாடுநர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். அல்லது அஞ்சல்துறை முகவர் பணிக்கு விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து கோட்ட கண்காணிப்பாளர், மேற்கு கோட்டம், சேலம் என்ற முகவரிக்கு அனுப்பவும். இது குறித்த கூடுதல் தகவலுக்கு, 0427 – 2333698, 2441848 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!