Personal Loan வாங்க திட்டமா? குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வழிமுறைகள் இதோ!

0
Personal Loan வாங்க திட்டமா? குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வழிமுறைகள் இதோ!
Personal Loan வாங்க திட்டமா? குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வழிமுறைகள் இதோ!
Personal Loan வாங்க திட்டமா? குறைந்த வட்டி விகிதத்தில் பெறும் வழிமுறைகள் இதோ!

அன்றாட வாழ்க்கையில் மக்களின் முக்கிய தேவையாக இருப்பது பணம். அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்வதில் பணம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அத்தகைய பணம் பற்றாக்குறையாக இருக்கும்பட்சத்தில் மக்கள் கடன் வாங்க முனைகிறார்கள். சிலர் தங்கள் வாங்கும் பொருட்களை கடனில் வாங்கி மாதந்தோறும் EMI செலுத்தி வருகின்றனர். மக்களின் தேவைக்கேற்ப வீட்டு கடன், தனிநபர் கடன், கல்விக்கடன் என பல விதங்களில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நவ.15 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு முழுநேர பள்ளிகள் – கல்வித்துறை அறிவிப்பு!

பல்வேறு காரணங்களால் தனிநபர் கடன் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. செக்யூரிட்டி குறைவாக இருக்கும் பட்சத்தில் அதிகமான கடன் தொகையை தனிநபர் கடன் மூலம் பெறலாம். இந்த தனிநபர் கடன் பெற 5 முக்கிய காரணிகள் உள்ளன.

கிரெடிட் ஸ்கோர்‌:

வாடிக்கையாளர்களின் கிரெடிட்‌ ஸ்கோர்‌ 700க்கும்‌ மேல்‌ இருக்கும்‌ பட்சத்தில்‌, குறைந்த வட்டியில்‌ பர்சனல்‌ லோன்‌ பெற முடியும். பணத்தை சரியாக செலுத்தி விடுவீர்கள்‌ என்ற நம்பிக்கை பெற கிரெட்டி ஸ்கோர்‌ முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடனை சரியான நேரத்தில்‌ திருப்பி செலுத்துதல்‌:

பர்சனல்‌ லோன்‌ பெறுவதற்கு பழைய லோன்களை சரியான நேரத்தில்‌ அடைத்துள்ளீர்கள்‌ என்பதையும்‌ ஆய்வு செய்த பிறகே வட்டி விகிதம் முடிவு செய்யப்படும். சரியான நேரத்தில் கடன் தொகையை கட்டாதவர்களுக்கு வட்டி விகிதம்‌ அதிகமாக கணக்கிடப்படும்.

தொழில்முறை சான்றிதழ்களை பயன்படுத்துங்கள்‌:

வாடிக்கையாளர்கள் பணியிட சான்றிதழைப்‌ பொறுத்து பர்சனல்‌ லோன்‌ தொகை முடிவு செய்யப்படும்‌. பயனர்களின் வருமானம்‌ அதிகமாக இருக்கும்‌ பட்சத்தில்‌ அதிகமான கடன்‌ வழங்கப்படுகிறது.

ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கடன்‌ பெறுவதற்கான வாய்ப்புகள்‌ அதிகமாக உள்ளது. இதற்கு வருமான வரி சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமான ஒன்று. மேலும் புகழ்பெற்ற நிறுவனத்தில் பணியாற்றும் பட்சத்தில் குறைந்த வட்டியில்‌ லோன் வழங்கப்படும்.

வங்கியுடன்‌ நல்லுறவு:

வங்கியுடன் நல்லுறவு மேம்படுத்துவது லோன் பெற உதவும். வங்கிக்‌ கணக்குகளில்‌ அடிக்கடி பணம்‌ செலுத்துவது, பணம்‌ எடுப்பது போன்ற செயல்கள்‌ மூலம்‌ வங்கியுடன்‌ நல்லுறவு வைக்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில்‌ லோன்‌ கிடைக்க விசாய்ப்புகள் உள்ளது.

வங்கிகளின்‌ வட்டி விகிதங்களைக்‌ கணக்கிடுங்கள்‌:

கடன்‌ வழங்கும்‌ வங்கிகளில்‌ உள்ள வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப்‌ பார்க்க வேண்டும். அதில்‌ குறைந்த வட்டியில்‌ கடன்‌ வழங்கும்‌ வங்கியைத்‌ தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதை பின்பற்றுவதன் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் தனி நபர் கடன் பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!