மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 2.75% உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

கர்நாடகாவை சேர்ந்த அரசுத்துறை ஊழியர்களுக்கு தற்போது 2.75% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.

அகவிலைப்படி உயர்வு

சமீப காலமாக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி (DA) உயர்வு உள்ளிட்ட சில சூப்பர் அறிவிப்புகளை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகையை அளிப்பதாக அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது கர்நாடக மாநில அரசு தனது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை (DA) உயர்த்தியுள்ளதாக இன்று (ஏப்ரல்.5) அறிவித்துள்ளது.

1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!

இப்போது ஜனவரி 1, 2022 முதல், கர்நாடக மாநில அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 27.25 சதவீத DA வழங்கப்பட இருக்கிறது. இது தற்போதுள்ள 24.50 சதவீதத்திலிருந்து 2.75 சதவீதம் அதிகமாகும். இந்த அறிவிப்பு தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், ‘கர்நாடக அரசு 2018 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி (DA) விகிதங்களை தற்போதுள்ள அடிப்படை ஊதியத்தின் 24.50% லிருந்து 27.25% ஆக 1 ஜனவரி 2022 முதல் நடைமுறைப்படுத்துகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்று அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – போராட்டம் எதிரொலி!

குறிப்பாக, மார்ச் 2022 மாத சம்பளம் வழங்கப்படும் தேதிக்கு முன்னர் DA நிலுவைத் தொகையை வழங்கக்கூடாது என்று கூறிய அரசாங்கம் DA என்பது ஊதியத்தின் தனித்துவமான அம்சமாக காட்டப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. அரசின் இந்த உத்தரவுகள் முழுநேர அரசு ஊழியர்கள், ஜிலா பஞ்சாயத்து ஊழியர்கள், வழக்கமான ஊதிய விகிதத்தில் பணிபுரியும் பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் முழுநேர ஊழியர்கள் உள்ளிட்ட வழக்கமான ஊதிய விகிதத்தில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!