‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்திற்கு பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? வெளியான ட்விஸ்ட்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து நடவிருக்கும் காட்சிகளாக தனத்தின் குழந்தை பற்றி தான் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பல வித உணர்வுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இந்த சீரியலில் தற்போது முக்கியமான கதாபாத்திரமாக காட்டப்பட்டு வந்த லட்சுமி அம்மா மரணம் அடைந்து விட்டது போல காட்டுகின்றனர். இந்த திடீர் திருப்பத்தினால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படியாக இருக்க, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரது திருமணம் தான் அம்மாவின் மரணத்திற்கு காரணம் என்று அனைவரும் நினைத்து வருகின்றனர்.
புதிய கதைக்களத்துடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – வெளியான தகவல் உண்மையா?
இதனால் குடும்பத்தின் மூத்த அண்ணன் மூர்த்தி அவரை தற்போது வரை குடும்பத்தில் சேர்த்து கொள்ள முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, சீரியலில் அடுத்து அனைவரும் எதிர்பார்த்து வருவது தனத்தின் குழந்தையை தான். தனத்தின் குழந்தை பிறந்த பின்னர் கூட லட்சுமி அம்மா மரணம் அடைந்து இருக்கலாம் என்று அனைவரும் கூறி வருகின்றனர். இப்படியாக இருக்க, தனத்திற்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது போன்ற செய்திகள் பரவி வருகிறது.
சின்னத்திரை நடிகராக ஜெயித்த ‘செம்பருத்தி’ சீரியல் விஜே அக்னி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
லட்சுமி அம்மா உயிருடன் இருக்கும் போது, அவர் தனத்திடம் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றும் அந்த குழந்தைக்கு அவரது கணவர் பெயரான ‘பாண்டியன்’ என்று வைக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், தற்போது அவர் மறைந்து விட்டதால், இறந்தவரே குழந்தையாக தனத்திற்கு பிறக்கலாம் என்றும் அந்த குழந்தை லட்சுமி அம்மா போலவே இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கவலையில் இருந்து வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியில் உள்ளாகலாம் என்றும் தெரிகிறது.