சின்னத்திரை நடிகராக ஜெயித்த ‘செம்பருத்தி’ சீரியல் விஜே அக்னி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
சின்னத்திரை நடிகராக ஜெயித்த 'செம்பருத்தி' சீரியல் விஜே அக்னி - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சின்னத்திரை நடிகராக ஜெயித்த 'செம்பருத்தி' சீரியல் விஜே அக்னி - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சின்னத்திரை நடிகராக ஜெயித்த ‘செம்பருத்தி’ சீரியல் விஜே அக்னி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஒரு பிரபலமான யூடுயூப் சேனலில் விஜேவாக தனது பயணத்தை துவங்கி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த ‘செம்பருத்தி’ சீரியலின் ஆதித்யாவாக உருவாகி இருக்கும் விஜே அக்னி குறித்த சில விஷயங்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

விஜே அக்னி

பொதுவாக எந்தவொரு சினிமாவை பொருத்தளவும் திறமையுடன் அதிகளவு ரசிகர்களை பெற்றுள்ள ஒரு நடிகரோ, நடிகையோ தான் நீண்ட காலமாக நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் சினிமாவுக்குள் நுழைய ஆசைப்படுபவர்களுக்கு மிகப்பெரிய பலம் என்பது அவர்களது ரசிகர்கள் தான். நம் சமூகம் எவ்வளவு தான் ஒரு கலைஞனை கேலி, கிண்டல் செய்து வந்தாலும், திறமைகளை மதிக்க ஒருபோதும் தயங்குவதில்லை.

பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி! போலீசார் விசாரணை!

அந்த வகையில் ஒரு காலத்தில் பல்வேறு கேலி, கிண்டலுக்கு ஆளான ஒருவர் மக்களின் மனதுக்கு ஏற்றவராக மாறி இருக்கும் ‘செம்பருத்தி’ சீரியலின் ஆதித்யாவான விஜே அக்னி குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். சின்னத்திரை நடிகராக தற்போது பயணித்து வரும் விஜே அக்னி நடிக்க வருவதற்கு முன்பாக பிரபல யூடியூப் தளத்தில் விஜேவாக பணியாற்றி வந்தார். விஜேவாக தனக்கென தனி பாணி அமைத்து கொண்டு பிரபலங்களை பேட்டி எடுக்கும் இவருக்கு சொல்லக்கூடிய அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர்.

அந்த வகையில் இவரது விஜே பணி தமிழ் திரையுலக நட்சத்திரங்களையும் தாண்டி பிரபாஸ், அல்லு அர்ஜூன், ராம்சரண், அமலா உள்ளிட்ட தெலுங்கு திரையுலக பிரபலங்களையும் கடந்து போனி கபூர், ஜான்வி கபூர் என பாலிவுட் பிரபலங்களுடனும் பயணித்தது. குறிப்பாக ஒரு ரசிகருக்கு தேவையான பிரபலங்களின் விஷயங்களை எளிதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் திறமையை மிக சிறப்பாக கையாண்டவர் விஜே அக்னி. இந்நிலையில் தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செம்பருத்தி’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு விஜே அக்னிக்கு கிடைத்தது.

லட்சுமி, ஹேமா மீது பாசத்தை கொட்டும் வெண்பா – பாரதியுடன் சேர திட்டமா?

அதுவரை அக்னியை ஒரு விஜேவாக பார்த்து வந்த ரசிகர்கள் ஆதி கதாப்பாத்திரத்தில் பார்ப்பதற்கு சற்று தயக்கம் காட்டி வந்தனர். ஏனென்றால், செம்பருத்தி சீரியலில் பெஞ்ச் மார்க் ஆன ஆதி – பார்வதி ஜோடியை கார்த்திக் – ஷபானாவாக மட்டும் ரசித்து வந்த ரசிகர்கள் கார்த்திக் இடத்தில் விஜே அக்னியை பார்க்க தயங்கினார்கள். அதனால் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தார் அக்னி. ஆனால் நாட்கள் செல்ல அக்னி – ஷபானா ஜோடியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளனர். இதன் மூலம் விஜேவாக மட்டுமல்ல ஒரு சிறந்த நடிகராகவும் ரசிகர்களுக்கு தன்னை நிரூபித்துள்ளார் விஜே அக்னி.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!