புதிய கதைக்களத்துடன் விரைவில் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2 – வெளியான தகவல் உண்மையா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இரண்டாம் பாகம் வெளிவர இருப்பதாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில் இது குறித்த சிறிய விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.
பாரதி கண்ணம்மா
தற்போதெல்லாம் சீரியலை குறித்த பேச்சை எடுத்தாலே பலரும் பேசக்கூடிய ஒரு முக்கிய சீரியலாக ‘பாரதி கண்ணம்மா’ இருந்து வருகிறது. அதற்கு காரணம் என்னவென்றால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் உயிரோட்டமான கதைக்களம் தான். இதுவரை தமிழ் சீரியல்களில் மாமியார் கொடுமைகள், பழி வாங்குதல் என பார்த்து பார்த்து சலித்து வந்த நிலையில் தான், முற்றிலும் வித்தியாசமான, மாறுபட்ட கோணத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் துவங்கியது.
சின்னத்திரை நடிகராக ஜெயித்த ‘செம்பருத்தி’ சீரியல் விஜே அக்னி – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அந்த வகையில் நல்ல கதைக்களத்தை கொண்ட இந்த சீரியலும் அவ்வப்போது சில சறுக்கல்களை சந்தித்து வருகிறது. பாரதியின் சந்தேகம், வெண்பாவின் வில்லத்தனம், கொலை முயற்சி, சண்டை, கலாட்டா என பல்வேறு இடங்களில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒளிபரப்பாகி வரும் சமீபத்திய காட்சிகள் அனைத்தும் உண்மையான கதைக்கு சற்று உயிர் கொடுப்பதாக மாறி இருக்கிறது.
அந்த வகையில் பாரதியும், கண்ணம்மாவும் தங்களது 2வது குழந்தை குறித்த தேடலில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தான் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் 2ம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிலும் கண்ணம்மாவின் குழந்தை லட்சுமி கதாப்பாத்திரத்தில் நடிகை அனிகா நடிக்க இருப்பதாகவும், அவர் கலெக்டர் ஆவதாகவும் வெளியாகும் தகவலை அடித்து சொல்வது போல சில எடிட்களும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி! போலீசார் விசாரணை!
என்றாலும், தெலுங்கில் ஒளிபரப்பாகும் ‘கார்த்திகா தீபம்’ என்ற சீரியலின் மறுதயாரிப்பு தான் தமிழில் ‘பாரதி கண்ணம்மா’ வாக வெளியாகி வருகிறது. தெலுங்கில் தற்போது 1000 எபிசோடுகளை கடந்திருக்கும் இந்த சீரியலில் கார்த்திக்கும், தீபாவும் ஒருவழியாக ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் ‘பாரதி கண்ணம்மா’ வில் அதற்கான வாய்ப்புகள் இப்போது தான் ஆரம்பித்துள்ளது போல தெரிகிறது. அதனால் ‘பாரதி கண்ணம்மா’ 2வது சீசன் துவங்க வாய்ப்புள்ளதாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது