புது கடைக்கு அட்வான்ஸ் கொடுத்த கதிர், பாண்டியனை வெளியே அழைத்து செல்லும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

0
புது கடைக்கு அட்வான்ஸ் கொடுத்த கதிர், பாண்டியனை வெளியே அழைத்து செல்லும் கண்ணன் - இன்றைய எபிசோட்!
புது கடைக்கு அட்வான்ஸ் கொடுத்த கதிர், பாண்டியனை வெளியே அழைத்து செல்லும் கண்ணன் - இன்றைய எபிசோட்!
புது கடைக்கு அட்வான்ஸ் கொடுத்த கதிர், பாண்டியனை வெளியே அழைத்து செல்லும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் முல்லையிடம் புது கடைக்கு இடம் பார்த்துவிட்டதாக சொல்கிறார். பின் மீனா கடையில் கஷ்டப்பட்டு வேலை செய்வதை ஜனார்த்தனன் பார்த்துவிட்டு, தன்னுடைய கடைக்கு வர சொல்கிறார். பின் கதிர் புது கடைக்கு தேவையான அட்வான்சை சென்று கொடுக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர், முல்லை அப்பாவிடம் புது கடை பார்த்துள்ளதாக சொல்ல, முல்லை அப்பா எல்லாம் நல்லபடியாக நடக்கும் என சொல்கிறார். பின் முல்லை, புது கடை எப்படி இருக்கிறது என கேட்க நல்ல இடமாக தான் இருக்கிறது. இன்னைக்கே பணம் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளதாக சொல்கிறார். பின் மீனா கடையில் கஷ்டப்பட்டு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது சரியாக வேலை செய்ய முடியாமல் மீனா திணறுகிறார்.

கண்ணன் வந்து கடையில் மீனா வேலை செய்வதை பார்த்து சிரிக்கிறார். இப்படி எல்லாம் சிரிக்காதே என மீனா சொல்ல, கண்ணன் வெறும் பொருள் மட்டும் இருக்கிறது. அட்ரஸ் எங்கே என கேட்க மீனா மறந்துவிட்டதாக சொல்கிறார். பின் கண்ணன் ஆர்டர் வாங்கிட்டிங்க அதை எங்கே டெலிவெரி செய்ய வேண்டும் என கேட்க மீனா மறந்துவிட்டதாக சொல்கிறார். பின் மீனா அவங்களே போன் செய்வார்கள் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இப்படி ஒவ்வொன்றிற்கும் உன் அருகே இருந்து வேலை செய்தால் என்ன ஆகும் என ஜீவா கேட்கிறார். பின் மீனா கடையில் பொருள்களை எல்லாம் அடுக்கி வைத்து கொண்டிருக்க ஜனார்த்தனன் வந்து அதை எல்லாம் பார்த்து வருத்தப்படுகிறார். பேசாமல் வீட்டில் இருக்க வேண்டியது தான உனக்கு இதெல்லாம் தேவையா என ஜனார்த்தனன் கேட்கிறார். மீனா வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யா 24 மணி நேரமும் சண்டை போடுகிறாள் என சொல்ல, ஜனார்த்தனன் பேசாமல் நம்ம கடைக்கு வந்து வேலை செய்யலாமே என சொல்கிறார். பின் மீனா, அதெல்லாம் எப்படி நடக்கும் ஆனால் எனக்கு இருக்கும் மனநிலைக்கு நான் வந்துவிடுவேன் என சொல்கிறார்.

பின் மீனாவின் அப்பா, வந்து ஒரு வாரம் நம்ம வீட்டில் இருக்கலாமே என சொல்ல ஜீவா அப்படி எல்லாம் வரமாட்டான் என மீனா சொல்கிறார். பின் கடையில் வேலை வர மீண்டும் மீனா வேலையை கவனிக்க செல்கிறார். ஜனார்த்தனன் அதை எல்லாம் பார்த்து வருத்தப்படுகிறார். என்னமா நீ அங்கே கடைக்கு வந்து உட்கார்ந்து இருக்க சொன்னால் நீ வராமல் இருக்கிறாய், வேறு வழி இல்லாதவர்கள் தான் இங்கே வந்து இருக்கலாம் நீ மாப்பிள்ளையிடம் சொல்லி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என சொல்கிறார்.

பின் கதிர், முல்லையை அழைத்து கொண்டு கடையை காட்ட வருகிறார். இடம் எப்படி இருக்கிறது என கேட்க நன்றாக இருக்கிறது என முல்லை சொல்கிறார். பின் முல்லை அப்பா வந்து பார்த்துவிட்டு ஏற்கனவே டீ கடை இருக்கும் போல என கேட்கிறார். ஆமாம் என கதிர் சொல்கிறார். பின் ஓனர் வந்து, நீங்க மூர்த்தியின் தம்பி என சொல்லிவிட்டீர்கள் அதனால் அட்வான்ஸ் குறைத்து கொள்கிறேன் என சொல்கிறார். ஆனால் கதிர் வேண்டாம் என சொல்கிறார். பின் கதிர் பணத்தை கொடுக்கிறார்.

மறுபக்கம் தனம் பாண்டியனை பார்த்துக் கொள்ள ஐஸ்வர்யா இன்னைக்கு மீனா இல்லாமல் இருப்பதால் சத்தமே இல்லாமல் இருப்பதாக சொல்கிறார். இன்னைக்கு சத்தம் எல்லாம் கடையில் தான் இருக்கும் என தனம் சொல்ல, ஐஸ்வர்யா நான் சாப்பாடு கொண்டு சென்று கொடுக்கிறேன் என சொல்கிறார். பின் கண்ணன் வர ஐஸ்வர்யா எங்கே என கேட்கிறான். அவள் கடைக்கு சென்று இருப்பதாக சொல்ல, பாண்டியனை வெளியே கூட்டி கொண்டு செல்லவா என கேட்க, இந்த வெயிலில் எதற்கு என தனம் கேட்கிறார்.

பாக்கியா வருகையால் சந்தோசப்படும் குடும்பத்தினர், குழப்பத்தில் இருக்கும் கோபி – இன்றைய எபிசோட்!

கண்ணன், சும்மா வெளியே கூட்டிக் கொண்டு செல்கிறேன் என சொல்கிறார். தனம் அது சரி என சொன்னதுடன் பாண்டியனை அழைத்து கொண்டு கண்ணன் வெளியே செல்கிறார். பின் கதிர் புது தொழில் பற்றி நினைத்து கொண்டிருக்க முல்லை, அன்று புது தொழில் செய்வது பற்றி எவ்வளவு நினைத்து பயந்தோம், ஆனால் இப்போது எல்லாம் சரியாக வந்துவிட்டது என சொல்லி, முல்லை கடையை எப்படி நடத்தலாம் என  பேசுகிறார். இதெல்லாம் நடக்குமா என கதிர் கேட்க முல்லை நம்ம கடை சரியாக வரும் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!