பணம் கொடுத்ததை குத்திக்காட்டி பேசிய ஜனார்த்தனன், முல்லையை பார்க்க வந்த தனத்தின் அம்மா – இன்றைய எபிசோட்!

0
பணம் கொடுத்ததை குத்திக்காட்டி பேசிய ஜனார்த்தனன், முல்லையை பார்க்க வந்த தனத்தின் அம்மா - இன்றைய எபிசோட்!
பணம் கொடுத்ததை குத்திக்காட்டி பேசிய ஜனார்த்தனன், முல்லையை பார்க்க வந்த தனத்தின் அம்மா - இன்றைய எபிசோட்!
பணம் கொடுத்ததை குத்திக்காட்டி பேசிய ஜனார்த்தனன், முல்லையை பார்க்க வந்த தனத்தின் அம்மா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனாவின் அப்பா அம்மா மீனாவை பார்க்க வருகின்றனர். அப்போது மீனாவின் அப்பா முல்லைக்கு சீக்கரம் குழந்தை பிறந்துவிடும் என சொல்ல, பின் இவ்வளவு பணம் செலவு எப்படி செய்கிறார்கள் என கேட்கிறார். பின் உனக்கு மட்டும் பாத்ரூம் கட்டி கொடுக்கமாட்டாங்க என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை படுத்து ரெஸ்ட் எடுக்க தனம் வந்து எதாவது தேவை என்றால் என்னிடம் வந்து கேளு என சொல்கிறார். பின் மீனா வர வலி எதுவும் இல்லையே என கேட்கிறார். பின் உங்களுக்கு எப்படி எல்லாம் குழந்தை பிறக்க வேண்டுமோ அப்படி நினைத்து கொண்டே இருங்கள் என சொல்கிறார். அதன் பின் ஐஸ்வர்யா வந்து முல்லைக்கு மோர் கொடுக்கிறார். முல்லை இந்த குடும்பத்தை நினைத்து மிகவும் சந்தோசப்பட ஆனால் நாம தான் கஷ்டப்படுத்திவிட்டோம் என நினைக்கிறார். பின் மீனாவின் அப்பா அம்மா வர அவர்கள் கயல் பாப்பா எங்கே என கேட்கிறார். அப்போது அவள் தூங்கி கொண்டு இருக்கிறாள் என மீனா சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

முல்லைக்கு முடியவில்லை என்பதால் கதிர் மாப்பிள்ளை கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறார் என கேள்வி பட்டதாக சொல்கிறார். ரொம்ப சந்தோசம் என ஜனார்த்தனன் சொல்ல பின் கலை நீங்க என்னமோ பார்த்த மாதிரி சொல்றீங்க என கேட்கிறார். பின்கதிர் மாமா பார்க்கவில்லையா என கேட்க இல்லை அவருக்கு அப்போது மிகவும் வேலை இருந்தது, அதனால் தான் வேலைக்கு ஆள் வைத்ததாக சொல்கிறார். பின் கலை என்ன டிரீட்மென்ட் என கேட்க செயற்கை கருத்தரிப்பு முறை என மீனா சொல்கிறார். இந்த சின்ன வயசில் ஏன் உடம்பை வருத்திக் கொள்ள வேண்டும் என ஜனார்ததனன் கேட்கிறார்.

பின் ஜனார்த்தனன் நான் இதை பற்றி கேள்வி பட்டிருக்கேன் எனக்கு தெரிந்த ஒருவரின் மகளுக்கு இப்படி தான் குழந்தை பிறந்தது என சொல்கிறார். அப்போது முல்லை குழந்தை பிறந்ததா என கேட்க ஆமாம் பிறந்துவிட்டது என சொல்கிறார். ஆனால் 5 முறை சிகிச்சைக்கு பின் தான் பிறந்தது என சொல்கிறார். பின் தனம் முல்லை உள்ளே செல்ல மீனா ஏன் அப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க என கேட்கிறார். அவர் அப்படி தான் என உனக்கு தெரியாதா என கேட்க, கலை அதற்கு நிறைய செலவாகி இருக்குமே என சொல்கிறார். மீனா ஆமாம் 5 லட்சம் கொடுத்தாங்க என சொல்கிறார்.

வாரத்தில் 4 நாட்கள், தினசரி 8 மணிநேரம் வேலை – புதிய தொழிலாளர் சட்டத்தின் அம்சங்கள்!

ஆனால் நாம கேட்டால் மட்டும் கதை சொல்வார்கள் என சொல்கிறார். உன் கூட கல்யாணம் முடிந்த பெண்ணிற்கு எல்லாம் நடக்கிறது. ஆனால் உனக்கு ஒரு பாத்ரூம் கட்ட எப்படி பிரச்சனை செய்தார்கள் என கேட்கிறார். பின் இவர்கள் பேசுவதை எல்லாம் கதிர் கேட்டு விடுகிறார். பின் எல்லாரும் பேசிக் கொண்டிருக்க முல்லை ரெஸ்ட் எடுக்குறாங்க, ஐஸ்வர்யா கடைக்கு போறாங்க அதுனால உங்களுக்கு நிறைய வேலை என மீனா தனத்திடம் கேட்க நான் மெதுவாக செய்வேன் அதனால் தான் செய்யவில்லை என மீனா சொல்கிறார். பின் முல்லைக்கு கதிர் சாப்பாடு ஊட்டிவிட இத்தனை நாள் இப்படி கம்மியாக தான் சாப்புடுவியா என கேட்கிறார். முல்லை அக்கா ரூமில் எதோ சத்தம் என பார்க்க மாமா அக்காவிற்கு சாப்பாடு ஊட்டுவதாக சொல்கிறார்.

பின் கதிர் எல்லாரும் இருப்பதை பார்க்காமல் முல்லையை தூக்கி கொண்டு சென்று விடுகிறார். அப்போது முல்லை எல்லாரும் பார்த்துவிட்டார்களா என கேட்க, பாத்ரூம் ரொம்ப தூரத்தில் இருக்கிறது அதனால் முல்லை நடக்க வேண்டாம் என கதிர் தூக்கி கொண்டு செல்கிறான் என ஜீவா சொல்கிறார். ஒரு பொண்ணுக்கு ஒரு கணவர் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என ஆசைபட்டேனோ அதை எல்லாம் நீங்க செய்கிறீர்கள் என சொல்லி முல்லை சந்தோசப்படுகிறார். பின் முல்லை கயலை கொஞ்சிக் கொண்டிருக்க,கதிர் வந்து இங்கையே இரு எங்கையும் நடக்காதே என சொல்கிறார்.

அப்போது தனத்தின் அம்மா வர முல்லை எழுந்திருக்க வருகிறார். அப்போது தனம் அம்மா வேண்டாம் என சொல்ல நான் உன்னை பார்க்க தான் வந்தேன் என சொல்கிறார். பின் தனம் எங்கே என கேட்க அவங்க சமைத்து கொண்டிருக்கிறார்கள் என சொல்கிறார். இந்த 3 பேரும் இங்கே உட்கார்ந்து இருக்கிறார்கள் ஆனால் அவள் மட்டும் வேலை செய்கிறாள் என நினைத்து கொள்கிறார். பின் தனத்திடம் சென்று அம்மா குறை சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!