கஷ்டப்பட்டு பரிகாரத்தை முடித்த முல்லை, உண்மையை அறிந்து வருத்தப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கஷ்டப்பட்டு பரிகாரத்தை முடித்த முல்லை, உண்மையை அறிந்து வருத்தப்படும் தனம் - இன்றைய
கஷ்டப்பட்டு பரிகாரத்தை முடித்த முல்லை, உண்மையை அறிந்து வருத்தப்படும் தனம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கஷ்டப்பட்டு பரிகாரத்தை முடித்த முல்லை, உண்மையை அறிந்து வருத்தப்படும் தனம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கஷ்டப்பட்டு பரிகாரம் எல்லாம் நல்லபடியாக செய்து முடிக்கிறார். பின் கதிர் வீட்டிற்கு அழைத்து வர தனம் அதை பார்த்து வருத்தப்படுகிறார். முல்லையிடம் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்க குழந்தைக்காக தான் எல்லாம் செய்ததாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கஷ்டப்பட்டு பரிகாரம் செய்து முடிக்கிறார். பின் முல்லை மயக்கம் போட்டு விழ கதிர் அவரை தாங்கி பிடிக்கிறார். கஸ்தூரி தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க உன் உடம்பு தாங்காது என சொன்னேன் கேட்டியா என சொல்கிறார். பின் கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். முல்லைக்கு வீட்டு வாசப்படி கூட தாண்ட முடியாமல் இருக்க கதிர் அவரை தூக்கி சென்று வீட்டிற்குள் அமர வைக்கிறார். பின் தனம் வந்து என்ன நடந்தது என கேட்க, கதிர் நடந்ததை சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது மீனாவும் வர முல்லையின் நிலைமையை பார்த்து வருத்தப்படுகிறார். தனம் எனக்கு குழந்தை இல்லாத போது கூட அம்மா அங்கே பரிகாரம் கடுமையாக இருக்கும் அதனால் செய்ய வேண்டாம் என சொன்னார் ஆனால் இப்போது நீ எப்படி இவ்வளவு கடினமான பரிகாரத்தை செய்தாய் என கேட்கிறார். பின் ஜீவா கண்ணன் ஐஸ்வர்யா எல்லாரும் வர ஏன் இப்படி எல்லாம் செய்கிறீர்கள் என கேட்கிறார். பின் முல்லையை அழைத்து கொண்டு சென்று படுக்க வைக்கிறார்.

தனம் முல்லையை நினைத்து வருத்தப்பட்டு அழ மீனா வந்து ஏன்அக்கா அழுது கொண்டே இருக்கீங்க என கேட்கிறார் . பின் கஸ்தூரி வர தனம் உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா என கேட்கிறார். நீங்க ஏன் முல்லையை கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போனீங்க என சொல்ல முல்லை தான் என்னை கூட்டிக் கொண்டு போனதாக சொல்கிறார். பின் முல்லை குழந்தை இல்லை இல்லை என நினைத்து அழுதால் அதனால் தான் நான் கூட்டிக் கொண்டு சென்றேன் என சொல்கிறார். முல்லை பாவம் என மீனா சொல்ல அவள் தான் என்னை அழைத்து கொண்டு சென்றாள் என சொல்கிறார்.

பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

தனத்திடம் நீங்க குழந்தை பிறக்காது என்பதால் எதாவது செய்தீர்களா என கேட்க செய்யலாம் என முடிவு செய்துள்ளதாக மீனா சொல்கிறார். பின் சொன்னீங்க ஆனால் செய்யவில்லையே  என கேட்கிறார். பின் முல்லைக்கே உங்க மீது நம்பிக்கை இல்லை அதனால் தான் கோவிலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். பின் முல்லை நிலைமையை பார்த்து அம்மா அப்பா அழுகின்றனர். அப்போது முல்லை அப்பா காய்ச்சல் அடிக்கிறதா என கேட்க கால் எல்லாம் கொப்புளம் இருப்பதாக சொல்கிறார்.

எனக்கு குழந்தை பிறக்காது என  வருத்தமாக இருந்தது அதனால் தான் இப்படி செய்தேன் என முல்லை சொல்ல குழந்தை இல்லாமல் இருந்தால் என்ன என கேட்கிறார். வீட்டில் செலவு அதிகமாக இருக்கிறது அதனால் தான் நான் இப்படி செய்தேன் என சொல்கிறார். அப்பாவிடம் பணம் இருந்தால் கொடுத்திருப்பேன் இல்லாததால் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் என சொல்கிறார். முல்லை அப்பா தனத்திடம் வந்து  பேச முல்லை இப்படி செய்வாள் என எங்களுக்கு தெரியாது என சொல்கிறார். நாங்கள் பணத்தை ரெடி செய்து கொண்டு தான் இருக்கோம் என சொல்ல ஆனால் வீட்டில் நிறைய செலவு இருக்கும் இப்படி சிக்கலை கடவுள் ஏன் எனக்கு கொடுக்கிறார் என கேட்கிறார். பின் கதிர் முல்லை நினைத்து வருத்தப்பட ஜீவா வந்து பேசுகிறார். முல்லைக்கு குழந்தை வேண்டும் என ஆசை அதனால் தான் இப்படி எல்லாம் செய்கிறது என ஜீவா ஆறுதல் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here