பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

0
பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா - இன்றைய எபிசோட்!
பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி அவார்ட் வாங்கிவிட்டு சௌந்தர்யா வேணுவிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் விக்ரம் வந்து தன்னுடைய மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்கிறார். மறுபக்கம் வெண்பா பாரதி விருது வாங்கியது பற்றி தெரியாமல் இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி விருது வாங்கிவிட்டு வர எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர். சௌந்தர்யா வேணு காலில் விழுந்து பாரதி ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் கண்ணம்மா லட்சுமி கிளம்ப அகில் அஞ்சலியும் கிளம்புகின்றனர். அப்போது விக்ரம் வருகிறார். நிகழ்ச்சி முடிந்ததும் வருகிறாய் என சௌந்தர்யா கேட்க முக்கியமான வேலை இருந்ததாக சொல்கிறார். பின் பாரதி விருது வாங்கியதை நேரலையில் பார்த்ததாக சொல்கிறார். பின் நீங்க பேசியது எல்லாம் உண்மை என சொல்கிறார். நான் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என விக்ரம் சொல்ல, ஹேமா நீங்க தான் விக்ரமா என கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் விக்ரம் நான் வாங்கி இருக்கும் புதிய மருத்துவமனைக்கு இன்னும் ஒரு நாளில் அப்ரூவல் கிடைத்துவிடும்.  அதற்காக தான் எனக்கு பாரதியின் உதவி வேண்டும் என சொல்கிறார். நான் அமெரிக்காவில் இருந்து வந்த போது எனக்கு பழைய நண்பர்கள் யாரும் இல்லை அதனால் என்னுடைய மருத்துவமனைக்கு ஒரு நல்ல மனிதர் வேண்டும் அவர் டாக்டராக இருக்க வேண்டும் என சொல்கிறார். அதனால் பாரதி என்னுடன் இணைந்து மருத்துவமனையை பார்த்துக் கொள்ள வேண்டும். நாம இருவரும் தனியாக என்ன வேலை செய்கிறோமோ அதை சேர்ந்து செய்ய வேண்டும் என சொல்கிறார்.

உனக்கு எல்லாம் செய்கிறேன் என விக்ரம் சொல்ல பாரதி சரி என சொல்கிறார். எல்லாரும் அதை கேட்டு மிகவும் சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் வெண்பா 12 மணி வரை தூங்கி கொண்டிருக்க ஷர்மிளா வந்து கோவமாக பார்க்கிறார். பொம்பள புள்ளை இப்படி தான் தூங்குவாங்களா என நினைத்து ஷர்மிளா வெண்பா மூஞ்சியில் தண்ணீர் ஊற்றுகிறார். 12 மணி வரை என்ன தூக்கம் ஒரு பெண்ணாக இருந்து இப்படி எல்லாம் இருக்கலாமா என கேட்கிறார். கல்யாணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டியே உனக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லையா என கேட்கிறார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்! ஜாக்பாட் அறிவிப்பு!

சரி இன்னைக்கு எவ்வளவு முக்கியமான நாள் என தெரியுமா என கேட்க வெண்பா எதுவும் தெரியாமல் இருக்கிறார். பின் ஷர்மிளா வெண்பாவிடம் இன்று பாரதிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் அவனது குடும்பத்தில் அனைவரும் கலந்து கொண்டனர் ஆனால் உனக்கு அது பற்றி தெரியவில்லை. இதில் இருவரும் திருமணம் செய்து கொண்டு போவதாக பேச்சு வேற. அவன் உன்னை கல்யாணம் செய்து கொள்ள மாட்டான், அவனை நீ நம்பவே நம்பத என சொல்கிறார். அம்மா உனக்கு நல்ல மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கிறேன். அந்த பாரதியை மறந்துவிடு என சொல்ல வெண்பா முடியாது என சொல்கிறார்.

நீ எல்லாத்தையும் நடத்தி காட்டும் வெண்பாவாக இருக்கலாம். ஆனால் அந்த வெண்பாவை பெற்றதே நான் தான் என ஷர்மிளா சொல்கிறார். நான் சொல்கிற பையனை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என ஷர்மிளா சொல்ல அம்மா வேற சவால் விட்டால் நடத்தி காட்டுவார் என்ன செய்ய போகிறேன் என தெரியவில்லை என நினைக்கிறார். பின் கண்ணம்மா கேசரி  செய்ய வடிவு வந்து என்ன விசேஷம் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா லக்ஷ்மிக்கு சாப்பிட தான் என சொல்ல, அதெல்லாம் இல்லை என வடிவு சொல்கிறார்.

பின் கண்ணம்மா இல்லை என சொல்ல அந்த டாக்டருக்காக தான கேசரி செய்கிறாய் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா உண்மையாவே அவர் மிகவும் நல்லவர் அவருடைய நல்ல குணத்தை பார்த்து நான் பல முறை வியந்து இருக்கிறேன் என சொல்கிறார். என் மீது சந்தேகம் இருப்பது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர் தான் என கண்ணம்மா சொல்கிறார். எவ்வளவு கோவமாக இருந்தாலும் நீ இப்படி பேசுவது மிகவும் சந்தோசமாக இருப்பதாக வடிவு சொல்கிறார். மறுபக்கம் பாரதி மருத்துவமனையில் இருக்க வெண்பா வருகிறார். அப்போது பாரதிக்கு வெண்பா பேசியது நியாபகத்திற்கு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!