
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டின் ரூல்ஸை மீறிய ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் குடும்பத்தினர் – வீக் எண்ட் ப்ரோமோ!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மூர்த்தியின் வீட்டிற்கு வந்து விட்ட நிலையில், வீட்டிற்குள் நடக்கும் மாற்றம் குறித்த எபிசோடுகள் வர உள்ளது. தற்போது இதற்கான ப்ரோமோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த சீரியல் மிகவும் பிரபலம். இந்த சீரியலில் தற்போது நடித்து வரும் அனைவருமே மிகவும் பிரபலமாகி உள்ளனர். காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்திருந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடியை தனம் மூர்த்தியை எதிர்த்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் ஆரம்பத்தில் கோவப்படும் மூர்த்தி, பின்னர் அமைதியாகிறார்.
கண்ணம்மாவிடம் நெருக்கமாகும் பாரதி, அறந்தாங்கி நிஷாவின் சூப்பர் பிளான் – ப்ரோமோ ரிலீஸ்!
இந்நிலையில், மீனா ஜீவா ஜோடியின் குழந்தை கயல் பிறந்த நாள் காட்சிகள் தான் சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில், மீனாவின் அப்பா மற்றும் அம்மா இருவரும் உங்க வீட்ல குழந்தைக்கு ஒன்னும் செய்யலையா என்று மீனாவை கேட்க, மீனாவும் அதை சமாளித்து வருகிறார். இந்நிலையில், தானம் மற்றும் மூர்த்தி இருவரும் கயல் பிறந்த நாளுக்காக வாங்கி வைத்திருந்த நகை மற்றும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் போன்றவற்றை அறிந்து மீனா நிம்மதி அடைகிறார். தற்போது இந்த வார இறுதிக்கான எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் “மக்கள் நாயகி” விஜே சித்ரா செய்த சாதனை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
அதில், அனைவரும் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஐஸ்வர்யா தண்ணீர் கொண்டு வந்து தருகிறார். அப்போது பார்த்தால் ஐஸூ நைட்டி அணிந்து இருக்கிறார். இதனால் தனம் சற்று ஷாக் ஆகிறார். இதனை கவனித்த கண்ணன் ஐஸூவை தனியாக கூப்பிட்டு இங்க ஏன் நைட்டி போட்ட என்று கூறுகிறார். இதுக்காக இப்படி தனியா கூட்டிட்டு வந்த என்று ஐஷூ கூலாக கேட்டு விட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் மீனா வந்து இந்த வீட்டுக்குன்னு ஒரு கட்டுப்பாடு இருக்கு, நாங்கெலாம் அதை சரியா செய்கிறோம். நீயும் அப்படி தான் இருக்கனும் என்று கூறுகிறார். இதற்கு ஐஷு நீங்க சொல்றதெல்லாம் கேட்ட சிரிப்பு, சிரிப்பா இருக்கு என்று கூறிவிட்டு செல்கிறார். இதனால் மீனா மிகவும் கடுப்பாகிறார்.