தமிழ் சின்னத்திரையில் “மக்கள் நாயகி” விஜே சித்ரா செய்த சாதனை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
தமிழ் சின்னத்திரையில்
தமிழ் சின்னத்திரையில் "மக்கள் நாயகி" விஜே சித்ரா செய்த சாதனை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தமிழ் சின்னத்திரையில் “மக்கள் நாயகி” விஜே சித்ரா செய்த சாதனை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லையாக மக்கள் மனதில் வாழ்ந்து வரும் மக்கள் நாயகி நடிகை விஜே சித்ரா முன்னணி சேனல்கள் அனைத்திலும் ஆல் ரௌண்டராக வேலை செய்து இருக்கிறார். அது பற்றிய முழு விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜே சித்ரா:

தமிழ் சின்னத்திரையில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து ரசிகர்கள் மத்தியில் “மக்கள் நாயகி” என்று அன்பாக அழைக்கப்பட்டவர் விஜே சித்ரா. அவர் விஜய் டிவியில் TRPயில் முன்னிலையில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பொதுவாக சீரியல் ஹீரோ ஹீரோயின் தான் மக்களிடம் பிரபலமானார். ஆனால் சீரியலில் சாதாரண கதாபாத்திரமான முல்லையாக நடித்து தனக்கொரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் விஜே சித்ரா.

கஷ்டப்படும் கண்ணம்மா, வருத்தப்படும் பாரதி, தடுக்கும் மனசாட்சி Repeatu – கதறும் ரசிகர்கள்!

அவர் நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தால் சின்னத்திரையில் முதன் முறையாக மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பின் அதே தொலைக்காட்சியில் என் சமையல் அறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வேந்தர் தொலைக்காட்சியில் ஜில் ஜங் ஜக், ஜீ தமிழில் தொலைக்காட்சியில் அஹா மாமியார் ஓஹா மருமகள், விஜய் தொலைக்காட்சியில் வசூல் வேட்டை ஆகிய நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

ஜெயா தொலைக்காட்சியில் மன்னன் மகள், சன் தொலைக்காட்சியில் சின்ன பாப்பா பெரிய பாப்பா, ஜீ தமிழில் தொலைக்காட்சியில் டார்லிங் டார்லிங், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வேலுநாச்சி, விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என இவர் வேலை பார்க்காத சேனலே இல்லை என்று சொல்லலாம். இவர் தொகுப்பாளினி, நடிகை, நடனம், பாடல், நகைச்சுவை என அனைத்திலும் ஆல் ரௌண்டராக இருந்திருக்கிறார். தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி தற்போது “மக்கள் நாயகி” என்ற பட்டத்தை அடைந்து இருக்கிறார்.

ஜீ தமிழ் ‘பூவே பூச்சூடவா’ ரேஷ்மா & மதன் திருமண டீசர் வீடியோ- குவியும் வாழ்த்துக்கள்!

ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது இன்னும் ரசிகர்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர் சின்னத்திரையில் செய்த சாதனைகளை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த 2019 மற்றும் 2020ஆம் ஆண்டின் சிறந்த 10 தொலைக்காட்சி நடிகைக்கான பட்டியலில் சித்ரா பெயர் இடம் பெற்றார். சித்ரா இறந்து ஒரு ஆண்டு முடிவடைந்த நிலையில் அவருடைய கலை திறமைகள் இன்னும் பேசப்பட்டு வருவது அவர் செய்த சாதனையாகவே இருக்கிறது. அவர் உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும் அவருடைய கலை திறமையால் இன்னும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!