விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்திற்கு பிறந்த குழந்தை – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் தனத்திற்கு பிறந்த குழந்தை - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் தனத்திற்கு பிறந்த குழந்தை - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்திற்கு பிறந்த குழந்தை – வைரலாகும் புகைப்படம்!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படிப்பிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தில் தனத்துக்கு பிறந்த குழந்தை இடம்பெற்றுள்ளது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய தருணம் தனத்தின் பிரசவம் தான். ஏனென்றால் பல நாட்களாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் குடும்பத்தினரை சோகமாக பார்த்து வந்த ரசிகர்கள் சீரியல் தற்போது தான் வழக்கமான பாணிக்கு வந்துள்ளதாக சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இதனுடன் மூர்த்தியின் வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு குடி வந்திருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது கண்ணன் குடும்பத்தினருடன் வம்பிழுக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

புது கடைக்கு பூஜை போடும் குடும்பம், கண்ணனுக்கு பாயசம் கொடுக்கும் முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

இதற்கு மத்தியில் தனத்துக்கு பிரசவம் ஏற்பட இருப்பதாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. இது சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஒரு சில நாட்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனத்துக்கு பிறந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் கடைகள், கோவில்கள் திறப்பு & வேலைவாய்ப்பு முகாம்கள் – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!

அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இயக்குனருக்கு படப்பிடிப்பு தளத்தில் வைத்து சமீபத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஹேமா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்துக்கு பிறந்த குழந்தையை கையில் வைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!