விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் பெற்றுக்கொள்ளும் ஒரு நாள் சம்பளம் குறித்த விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் இது குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் காணலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரையில் சுமார் 4 ஆண்டுகளாமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை பிடித்திருக்கும் ஒரு சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் சுமார் 800 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டு குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் பலருக்கும் பேவரைட் ஆன சீரியலாக இருந்து வருகிறது. மேலும் இத்தொடரில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் என்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்களும் அதிகம் தான்.

ஹேமா, லட்சுமியுடன் காரில் சுற்றுலா சென்ற கண்ணம்மா – பாரதி இல்லையா? ரசிகர்கள் கமெண்ட்!

குறிப்பாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் ஒவ்வொரு ஜோடிக்கும் தனித்தனியான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இப்போது இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் பெறும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதன் படி மூர்த்தி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது. அதே போல தனம் அண்ணியாக நடிக்கும் நடிகை சுஜிதாவுக்கு தினசரி ரூ.13 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கிறது.

சன் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

இவர்களை தொடர்ந்து ஜீவாவாக வரும் வெங்கட் அவர்களுக்கு ரூ.8,000 முதல் 10, 000 வரையும், மீனாவாக வரும் நடிகை ஹேமாவுக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரையும், கதிராக வரும் நடிகை குமரனுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையும், முல்லையாக வரும் காவ்யாவுக்கு ரூ.8,000 முதல் ரூ.10,000 வரையும், நடிகர் சரவண விக்ரமிற்கு ரூ.4,000 முதல் ரூ.6,000 வரையும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!