சன் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “அருவி” சீரியலில் தற்போது வில்லியாக “அழகு” சீரியல் புகழ் சோனியா களமிறங்க இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

நடிகை சோனியா:

கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்களின் ஒரே ஒரு பொழுதுபோக்காக சீரியல்கள் மாறியது. பல தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை புது பொலிவுடன் அனைவரும் கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டது தான் “அருவி” தொடர். பல புதிய திருப்பங்களுடன் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சீரியலில் மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்க பிரபல நடிகை ஒருவர் வில்லியாக வர இருக்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக அறிமுகமாகும் நடிகை சைத்ரா ரெட்டி? ரசிகர்கள் ஷாக்!

அவர் வேறு யாரும் இல்லை சன் டிவியில் முன்னதாக ஒளிபரப்பாகி வெற்றி கடந்த “அழகு” சீரியலில் நடித்த சோனியா தான். அந்த சீரியலில் திவ்யா என்கிற பெயரில் ஒரு அமைதியான குடும்ப தலைவியாக நடித்து இருந்தார். அப்பவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அந்த நேரத்தில் பல சீரியல்களில் பிசியாக இருந்த அவர் அதன் பின் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். பின் பல ஆண்டுகளாக அவர் சீரியலில் நடிக்க வரவில்லை. தற்போது ஆறு வருடங்கள் கழித்து அவர் சன் டிவி “அருவி” சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறார்.

சினிமா நட்சத்திரங்களின் விவாகரத்து பின்னணி பற்றி நிபுணர்கள் சொல்வது இதுதான்? அதிர்ச்சி தகவல்!

இது குறித்து அவர் கூறுகையில் திருமணம் முடிந்த பின் எதாவது சீரியலில் நடிக்க வேண்டும் என நினைத்தேன் தற்போது அருவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சன் டிவியில் தான் என்னுடைய முதல் சீரியல் ஆரம்பித்தது. அதே சன் டிவி வழியாக ஒரு நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் கிடைத்துள்ளது. இதனால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. ஆரம்ப கால சூட்டிங்கில், ஸ்பாட்டில் இருந்த எல்லோரும் நான் புதிதாக நடிக்க வந்த நடிகை என்று தான் நினைத்தார்கள். பின்னர் தான் நான் ஏற்கனவே சீரியலில் நடித்தது மற்றவர்களுக்கு தெரிய வந்தது. அது மட்டுமில்லாமல் முன்னர் நடித்த சீரியல்களில் நான் கொஞ்சம் குண்டாக இருந்தேன். இப்போது உடல் எடையை குறைத்து இருக்கிறேன். அதனால் என்னை பலருக்கு அடையாளம் தெரியவில்லை என சொல்லி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here