ஹேமா, லட்சுமியுடன் காரில் சுற்றுலா சென்ற கண்ணம்மா – பாரதி இல்லையா? ரசிகர்கள் கமெண்ட்!

0
ஹேமா, லட்சுமியுடன் காரில் சுற்றுலா சென்ற கண்ணம்மா - பாரதி இல்லையா? ரசிகர்கள் கமெண்ட்!
ஹேமா, லட்சுமியுடன் காரில் சுற்றுலா சென்ற கண்ணம்மா - பாரதி இல்லையா? ரசிகர்கள் கமெண்ட்!
ஹேமா, லட்சுமியுடன் காரில் சுற்றுலா சென்ற கண்ணம்மா – பாரதி இல்லையா? ரசிகர்கள் கமெண்ட்!

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி சீரியலில் தனது இரண்டு குழந்தைகளாக நடிக்கும் ஹேமா மற்றும் லட்சுமி கதாபாத்திரங்களுடன் ஜாலியாக வெளியில் செல்வது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வினுஷா தேவி:

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய திருப்பமான பாரதி மற்றும் கண்ணம்மா இருவரின் விவாகரத்து காட்சிகளின் போது தான் கண்ணம்மா கதாபாத்திரத்தில் புது நடிகை வினுஷா அறிமுகம் ஆனார். புது நடிகையின் வரவினால் சீரியலில் ஏதும் பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல புதிய திருப்பங்கள் செய்யப்பட்டு வந்தது. கண்ணம்மா மற்றும் பாரதிக்கு இடையில் அதிக ரொமான்ஸ் காட்சிகள் வர தொடங்கியது. மேலும், இருவரும் ஒருவர் மீது மற்றவருக்கு உள்ள கோவத்தை குறைக்கும் வகையிலும் நடந்து கொள்கின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவாக அறிமுகமாகும் நடிகை சைத்ரா ரெட்டி? ரசிகர்கள் ஷாக்!

இவர்களின் 10வது திருமண நாள் வர இருப்பதை அடுத்து சௌந்தர்யா இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சிகளையும் செய்து வருகிறார். ஆனால் பாரதி தொடர்ந்து கோவத்தில் தான் இருந்து வருகிறார். தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோவில் பாரதியும், கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பது போல் காட்சிகள் வருகின்றது. ஆனால் அதில் ஒரு ஒரு பெரிய சிக்கல் இருப்பது போலவும் ட்விஸ்ட் வைக்கப்படுகிறது. இதனால் இந்த வாரத்திற்கான எபிசோடுகள் குறித்து அதிக ஆர்வம் எழுந்துள்ளது.

சன் டிவியில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்த சீரியல் நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

இந்நிலையில், வினுஷா பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தன் இரண்டு குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக நடனம் ஆடுவது போல் உள்ளது. இதனால் இது தொடர்பான காட்சிகள் விரைவில் சீரியலில் வர உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகவும் மகிழ்ச்சி நிறைந்த நாள் என்றும் வினுஷா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோவிற்கு கமெண்ட் அளித்த ரசிகர்கள் பாரதி இல்லையா? என்று கேட்டு கிண்டல் செய்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!