கல்யாண பெண்ணாக ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, பிரபல ஷோரூம் ஒன்றில் தங்க நகைகளை ஷாப்பிங் செய்யும் வீடியோ ஒன்று யூடூப்பில் பரவலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
கல்யாண பெண்ணாக மாறிய ஹேமா:
தனியார் நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ”பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹேமா. இந்த தொடரில் ஜீவாவிற்கு மனைவியாக மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது ஒரு குடும்ப தொடராக, கூட்டு குடும்ப பிரச்சனைகளை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
12 மணி நேரம் பாடல் பாடி அன்பை நிரூபித்த சத்யா – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!
மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹேமா வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் குறித்து வீடியோ பதிவிடுவது, அழகு சாதனப்பொருட்கள், உணவு குறித்து விமர்சனங்கள் வெளியிடுவது என வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சென்னையில் தங்க மற்றும் வைர நகைகளுக்கென மிகப்பெரிய ஷோரூமில் தங்க நகைகளை ஷாப்பிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!
திருமணத்திற்கு தேவையான அனைத்து நகைகளும் இந்த ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நகைகளையும் அணிந்த படி ஹேமா கல்யாண பெண்ணாகவே மாறியுள்ளார். இவருடைய ரசிகர்கள் இந்த வீடியோவை கண்டு இப்படியெல்லாம் கலெக்ஷன்ஸ் இருக்கிறதா நம்மளும் இந்த ஷோரூமில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என பலரும் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ யூடூப்பில் வெளியிட்ட நிலையில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.