TNPSC குரூப் 4 தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகள்? முழு விபரம் இதோ!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகள்? முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகள்? முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகள்? முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அடுத்த ஆண்டு துவக்கத்தில் குரூப் 4 தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு தேவையான தகுதிகள், தேர்வு முறைகள், குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

TNPSC தேர்வு

தமிழக அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 2022ம் ஆண்டில் நடத்தப்பட இருக்கும் TNPSC போட்டித்தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இத்தேர்வுகள் மூலம் 11,000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறதாக தேர்வு வாரியம் தகவல் அளித்துள்ளது.

Tech Mahindra நிறுவனத்தில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 2022க்குள் பணியமர்த்த திட்டம்!

இதில் குரூப் 4 போட்டிக்கான அறிவிப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கான தகுதிகள், தேர்வு முறைகள் உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் குரூப் 4 தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி என்பது முக்கிய கல்வித்தகுதி என்பதால் பலரும் இத்தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் செலுத்துவார்கள்.

தவிர இதில் எழுத்துத்தேர்வு மட்டும் நடத்தப்படும் என்பதாலும் இத்தேர்வில் லட்சக்கணக்கான தேர்வர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது குரூப் 4 பிரிவில் 5,244 காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில், இதற்கான போட்டிகள் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பதவிகள்:
  • இளநிலை உதவியாளர் (Junior Assistant)
  • தட்டச்சர் (Typist)
  • சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist)
  • கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer)
  • வரித் தண்டலர் (Bill Collector)
  • நில அளவர் (Field Surveyor)
  • வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி:
  • இதில் தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தேர்ச்சி.

TNPSC Coaching Center Join Now

  • சுருக்கெழுத்தர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி அவசியம்.
வயதுத்தகுதி:
  • கிராம நிர்வாக அலுவலர் பணிகளில் பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரையும், மற்ற வகுப்பினர்களுக்கு 40 வயது வரையும் சலுகைகள் உண்டு.
  • இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பணிகளுக்கு, பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரையும் பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரையும் சலுகை உண்டு.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!