‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி - உற்சாகத்தில் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பாவின் ரீஎன்ட்ரி – உற்சாகத்தில் ரசிகர்கள்!

பாரதி கண்ணம்மா தொடரில் ஃபரீனா, வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தனது பிரசவத்தை ஒட்டி சில வாரங்கள் ஓய்வு எடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

பாரதி கண்ணம்மா வில்லி:

தனது சின்னத்திரை வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் ஃபரீனா. இவர் தனது திரை வாழ்க்கையை மிகவும் நேசித்து, தனது பணியினை செய்து வருகிறார். இதனால் ஃபரீனாவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அதிக ரசிகர்கள் இருந்து வந்தனர். முதலில் சன் டிவியில் தனது பயணத்தை தொடங்கியவர், பல முக்கிய சேனல்களிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் பிரமாதமாக பயன்படுத்தி தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத பிரபலமாகியுள்ளார். பாரதி கண்ணம்மா தொடரில் ஃபரீனா வெண்பா என்ற மருத்துவராக நடித்து வருகிறார். மிகவும் நெகட்டிவான ரோலில் நடிக்கும் ஃபரீனா நிஜ வாழ்க்கையில் இதற்கு நேர்மாறானவர்.

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

தனது கல்லூரி காதலன் பாரதியை திருமணம் செய்வதற்காக கொலை செய்யும் அளவிற்கு மோசமான பெண்ணாக நடித்துள்ளார். இந்த வெண்பா கதாபாத்திரம் தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமாகி உள்ளது. ஃபரீனா தன் கர்ப்ப காலத்தில் கூட கடின உழைப்பாக பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார். தனது பிரசவத்திற்கு சில நாட்கள் முன்னதாக தான் ஃபரீனா ஓய்வில் இருக்க தொடங்கினார். ஆனால் தனது குழந்தை பிறந்த சில நாட்களில் வெளியிட்ட பதிவில், மீண்டும் பணிக்கு விரைவில் திரும்புவேன் என்று குறிப்பிட்டிருந்தார். இவரது ஓய்வு காலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் போரடித்து விடாமல் இருப்பதற்காக, பாரதி மற்றும் கண்ணம்மா இடையில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர்!

இந்நிலையில், ஃபரீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெண்பா கெட்டப்பில் பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதை போல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், யார் பணிக்கு திரும்பி இருக்கிறார் என்பதை பாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஃபரீனா மீண்டும் நடிக்க தொடங்கி விட்டார் என்பதை ரசிகர்கள் உறுதி செய்து கொண்டனர். குழந்தை பிறந்த சில நாட்களில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கும், ஃபரீனாவிற்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. மேலும் சில ரசிகர்கள் சிங்கப்பெண் என்றும் புகழ்ந்துள்ளனர். இதனால் ஃபரீனா வெண்பாவாக மாறி இருப்பதால் சீரியலிலும் அடுத்த படியாக அதிரடியான காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!