
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ என்கிற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
பாரதி கண்ணம்மா
தமிழ் சின்னத்திரை தொடர்களில் ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 660 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றுள்ளது. பிரபல சின்னத்திரை சீரியல்களின் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஆரம்பம் முதலே நல்ல விமர்சனங்களை பெற்று TRP ரேட்டிங்கிலும் முதன்மையான இடத்தை பிடித்து வருகிறது.
சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகிய நடிகை – இனி இவருக்கு பதில் இவர்!
குறிப்பாக இந்த சீரியலில் நடித்து வரும் சில முக்கிய கதாப்பாத்திரங்கள் சின்னத்திரைக்கு புதிய முகங்களாக இருந்தாலும், ஒவ்வொருவரின் அசாத்திய நடிப்பு திறமையால் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மக்களின் பேவரைட் ஆக மாறி இருக்கிறது. இப்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அதிகபட்ச சம்பளம் பெறும் முதல் இடத்தில் சௌந்தர்யா கதாப்பாத்திரத்தில் வரும் ரூபாஸ்ரீ இடம்பெறுள்ளார்.
‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
இந்த சீரியலில் நடிப்பதற்கு இவருக்கு ரூ.15,000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது. அடுத்து அஞ்சலியாக நடித்து வரும் நடிகை ஸ்வீட்டி ஒரு நாளைக்கு ரூ.9,000, அகிலனாக நடித்து வந்த அகிலன் ஒரு நாளைக்கு ரூ.10,000, கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினிக்கு ரூ.20,000, பாரதியாக நடிக்கும் அருணுக்கு ரூ.20,000, ஹேமாவாக நடிக்கும் லிசாவுக்கு ரூ.8,000, லட்சுமியாக நடிக்கும் ரக்ஷவுக்கு ரூ.8,000, துளசியாக வரும் ஷெரினுக்கு ரூ.4,000, வெண்பாவாக நடிக்கும் பரினாவுக்கு ரூ.10,000 மற்றும் வேணுவாக நடிக்கும் ரிஷிக்கு ரூ.15,000 என சம்பளம் கொடுக்கப்படுகிறதாம்.