‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய இமான் அண்ணாச்சி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்கள் முடிவடைந்துள்ளது. கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறிய இமான் அண்ணாச்சி, முதன்முறையாக ரசிகர்களிடம் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி:
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் புதுவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 11 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். 9 பேர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் 2 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்துள்ளனர். முதல் வாரத்தில் நாதியா சங் வெளியேறிய நிலையில், கடந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேறினார்.
அவர் வெளியேறிய பின் அவரை சந்தித்த ஐக்கி பெர்ரி வீடியோ ஒன்றை அண்ணாச்சி உடன் சேர்ந்து எடுத்திருக்கிறார். அப்போது பேசிய அண்ணாச்சி நான் எடுக்காத கப்பை நம்ம ராஜு எடுக்க வேண்டும் என நான் ஆசைப்படுவதாக சொல்லி இருக்கிறார். ஐக்கியும் நானும் சேர்ந்து பல சேட்டைகளை செய்திருக்கிறோம் ஆனால் அதை எல்லாம் காட்டவே இல்லை. எனக்கும் வீட்டில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, இசைவாணி தான் வீட்டில் சின்ன பொண்ணு. அதனால் தான் அவருக்கு பேச தெரியவில்லை.
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் ‘வேலைக்காரன்’ சீரியல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதை அறிவுரை போல சொல்வேன் தவிர எந்த பிரச்சனையும் இல்லை. நான் 70 நாட்கள் இருந்ததே பெரிய விஷயம். எது நடந்தாலும் நாங்க சந்தோசமாக இருப்போம். இதுவரை ஆதரவு கொடுத்த எல்லாருக்கும் நன்றி என சொல்லி இருக்கிறார். பின் வீட்டிற்குள் சாப்பாடை எல்லாம் ஐக்கி மிஸ் செய்து விட்டார் என சொல்லி இருக்கிறார். ஐக்கி மேக்கப் போட ஒரு மணி நேரம் எடுப்பார். ஆனால் கண்ணாடி டாஸ்க் வரும் போது எனக்காக சீக்கிரம் வந்தார். வீட்டில் ஒரே ஒரு முட்டை தான் கொடுப்பாங்க அதனால் ஐக்கி அவளுடைய முட்டையை கொடுப்பார். வெளியே வந்தாலும் நாங்க சேர்ந்து இருக்கோம், ரொம்ப சந்தோசம். அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. அதில் ஐக்கி சேர்ந்து நடிப்பார். மேலும் ராஜு, அண்ணாச்சி, ஐக்கி கூட்டணி மீண்டும் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.