விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் - வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் நடைபெற்ற கொண்டாட்டம் – வைரலாகும் புகைப்படம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், சமீபத்தில் கயல் பாப்பாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டிருந்தது. இந்த விழா நடைபெற்ற போது படப்பிடிப்பு தளத்தில் நடிகர், நடிகைகள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

எப்போதும் போலவே குடும்பம், பிள்ளைகள், கொண்டாட்டம் என வழக்கமான கதைக்களத்துடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்சமயம் ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து சுமார் 770 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. என்றாலும் இந்த சீரியலின் கதைக்களம் சில எபிசோடுகளாக ஸ்வாரசியம் இல்லாமல் நகர்ந்து வருகிறது.

ஆணவ பேச்சால் பறிபோகும் படவாய்ப்புகள் – அச்சத்தில் இருக்கும் நடிகர் அஸ்வின்!

அந்த வகையில் வழக்கமான மூர்த்தி, கண்ணன் பிரச்சனை, தனத்தை பற்றி மீனாவுக்கு இருக்கும் குறை, குழந்தை பிரச்சனை என அரைத்த மாவையே திரும்ப அரைப்பது போல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம் காணப்பட்டு வருகிறது. இதில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா குடும்பத்துடன் ஒன்றிணைந்தது மட்டும் தான் எதிர்பாராத திருப்பமாக அமைந்தது. இதற்கு மத்தியில் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கயல் பாப்பாவிற்கு பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

விஜய் டிவி ‘செந்தூரப்பூவே’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஷூட்டிங்! ரசிகர்கள் உற்சாகம்!

இது தொடர்பான காட்சிகள் தான் கடந்த 3 எபிசோடுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் கயல் பாப்பாவின் பிறந்தநாள் தொடர்பான சில படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கயல் பாப்பாவுடன் நடிகர் குமரன், சரவண விக்ரம், நடிகை சுஜிதா, காவ்யா, ஹேமா ஆகியோர் எடுத்துக்கொண்ட ஃஆப் ஸ்கிரீன் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here