ஆணவ பேச்சால் பறிபோகும் படவாய்ப்புகள் – அச்சத்தில் இருக்கும் நடிகர் அஸ்வின்!

0
ஆணவ பேச்சால் பறிபோகும் படவாய்ப்புகள் - அச்சத்தில் இருக்கும் நடிகர் அஸ்வின்!
ஆணவ பேச்சால் பறிபோகும் படவாய்ப்புகள் - அச்சத்தில் இருக்கும் நடிகர் அஸ்வின்!
ஆணவ பேச்சால் பறிபோகும் படவாய்ப்புகள் – அச்சத்தில் இருக்கும் நடிகர் அஸ்வின்!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமான நடிகர் அஸ்வின். அந்த நிகழ்ச்சி மூலமாக பல பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஒரு இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சால் தற்போது அந்த படவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஸ்வின்:

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். அவரை போலவே விஜய் டிவியின் புகழ்பெற்ற குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் சமையல் செய்து சின்னத்திரை மூலம் பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் அஸ்வின். அந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி உடன் அவர் அடித்த லூட்டிகளை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு கிடைத்தனர். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவருடைய அழகான சிரிப்பிற்கு பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது.

விவாகரத்து வதந்திக்கு மத்தியில் “செம்பருத்தி” ஷபானாவின் இன்ஸ்டா பதிவு – ரசிகர்கள் குழப்பம்!

இதுவரை மியூசிக் ஆல்பங்களில் நடித்து வந்த அவருக்கு ஒரே ஒரு தயாரிப்பு நிறுவனமே அவரை வைத்து மூன்று படங்கள் எடுக்க அட்வான்ஸ் கொடுத்தது. அவர் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், எதார்த்தமாக பேசுகிறேன் என நினைத்து தலைக்கனமாக பேசி இருக்கிறார். இதனால் அவருடைய ஆணவமான பேச்சு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் சமூக வலைத்தளங்களில் அவரை திட்டி பல மீம்ஸ்கள் வலம் வந்தது.

விஜய் டிவி ‘செந்தூரப்பூவே’ சீரியல் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மீண்டும் ஷூட்டிங்! ரசிகர்கள் உற்சாகம்!

அதனால் பயந்து போன அவர் தெரியாமல் பேசிவிட்டதாக மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவிட்டார். ஆனால் அதையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள் அவரை பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பேசிய படி சமீபத்தில் ஒரு இயக்குனரிடம் கதை கேட்க ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட சொல்லி தயாரிப்பாளரை வர சொன்னதாகவும் ஒரு தகவல் வெளி வந்தது. அதை கேட்டதும் அவரை வைத்து படம் எடுக்க ஆசைப்பட்டவர்கள் கூட தற்போது பின் வாங்கி உள்ளனர். தினமும் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பணத்தை திருப்பி கேட்டு வருவதால், அவர் எதிர்கால சினிமா வாழ்க்கையை நினைத்து வருத்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!