விதவிதமாக ஷாப்பிங் செய்து குவித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – விலையை கேட்டு ஷாக்!

0
விதவிதமாக ஷாப்பிங் செய்து குவித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - விலையை கேட்டு ஷாக்!
விதவிதமாக ஷாப்பிங் செய்து குவித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மீனா - விலையை கேட்டு ஷாக்!
விதவிதமாக ஷாப்பிங் செய்து குவித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா – விலையை கேட்டு ஷாக்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக இருப்பவர். இவர் சமீபத்தில் ஷாப்பிங் செய்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இறுதியில் அனைத்து பொருட்களையும் வாங்கி விட்டு விலையை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா:

விஜய் டிவியில் பிரபலமாக உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் அனைத்து நடிகர், நடிகைகளும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்துள்ளனர். அதில் ஜீவா – மீனா ஜோடிக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கதைப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி எப்போதும் எலியும், பூனையுமாக சண்டையிட்டுக் கொள்வார்கள். மீனா வீட்டில் இருக்கும் அனைவரிடமும் வெடுக்கென்று பேசக்கூடியவர். இதனால் ஜீவா இதை சமாளித்து வருவதையே வேலையாக கொண்டிருப்பார்.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி – ரசிகர்கள் வாழ்த்து!

ஆனால் நாளடைவில் மொத்த குடும்பமும் மீனா மீது காட்டும் பாசத்தை பார்த்து மீனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் மீனா ஒன்றிவிடுவார். சமீப நாட்களாக மீனா கதாபாத்திரத்திற்கு கதையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மீனா கதாபத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, தனியாக ஒரு யூடூயூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சம்பவங்கள், தினசரி குறிப்புகள், வெளியில் சென்று எடுக்கும் வீடியோக்கள் என்று பலவற்றையும் வெளியிட்டு வருகிறார். இவருக்கு குறைந்த நாட்களிலேயே அதிக சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

Vijay TV Bigg Boss 5 Promo 2 | மீண்டும் அந்நியனாக மாறிய நிரூப், பிரியங்காவுடன் சண்டை!

இந்நிலையில் தி.நகரில் உள்ள கடையின் ப்ரோமோஷனிற்காக வரிசையாக சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் யூடூயூப் பிரபலங்கள் பலரும் சென்று வீடியோ எடுத்து வருகின்றனர். அங்கு, ஷாப்பிங் செய்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். சின்னத்திரை பிரபலங்கள் வாங்கும் பொருட்களை தாங்களும் வாங்கலாம் என்று கடைக்கு அதிக மக்கள் வர தொடங்குகிறார்கள். இந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவாக நடிக்கும் ஹேமா அந்த கடைக்கு சென்று விதவிதமான பொருட்களை வாங்கியுள்ளார். பின்னர் அத்தனைக்கும் குறைவான விலை கூறப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பதிவாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!