‘பாரதி கண்ணம்மா’ வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி - ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ வெண்பா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிக்பாஸ் ஆரி – ரசிகர்கள் வாழ்த்து!

சமீபத்தில் நடைபெற்ற ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினாவின் மகனின் பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆரியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் ஆரி

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா’ நெடுந்தொடர் கிட்டத்தட்ட 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் வெண்பா என்ற எதிர்மறை கதாப்பாத்திரம் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது பல உயரங்களை எட்டி இருப்பவர் நடிகை பரினா. ஆரம்பத்தில் ஒரு விஜேவாக சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கிய நடிகை பரினாவை ஒரு நடிகையாக மாற்றி அதற்கான அங்கீகாரத்தையும் பெற்று தந்திருக்கிறது இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்.

Vijay TV Bigg Boss 5 Promo 2 | மீண்டும் அந்நியனாக மாறிய நிரூப், பிரியங்காவுடன் சண்டை!

இப்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய வில்லி என்றால் அது வெண்பா தான் என்று சொல்லும் அளவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் நடிகை பரினா. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் நடிகை பரினாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட நடிகை பரினாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது.

விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியல் ஆல்யா வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!

இப்படி இருக்க சமீபத்தில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்திய நடிகை பரினாவின் வீட்டு விசேஷத்துக்கு பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த விழாவில் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான நடிகர் ஆரி கலந்து கொண்டு பரினாவின் குழந்தைக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!