ஆட்டோ ஓட்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

0
ஆட்டோ ஓட்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - அவரே வெளியிட்ட வீடியோ!
ஆட்டோ ஓட்டும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கண்ணன் - அவரே வெளியிட்ட வீடியோ!
ஆட்டோ ஓட்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி தம்பியாக நடித்து வரும் கண்ணன் (சரவண விக்ரம்) ஆட்டோ ஓட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அந்த விடீயோவிற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து குடும்ப கதைகளத்தை கொண்டு சீரியல் தொடர்கிறது. அனைவரது நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளது. தற்போது இந்த சீரியலில் திடீரென கடைசி தம்பியாக இருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இருவரும் தங்க கூட இடம் இல்லாமல் செலவுக்கு பணமும் இன்றி அலைகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் – இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!

இறுதியாக ஒரு வீடு கிடைக்கிறது, பின்னர் வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இந்த நிலையில் கண்ணனின் அம்மா லட்சுமி கண்ணன் திருமணம் செய்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் இறந்து விடுகிறார். இந்த நிலையில் கண்ணன் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து விட வேண்டும் என்ற நோக்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு எதிரிலேயே குடித்தனம் வருகின்றனர். தற்போது சீரியலில் குடும்பத்துடன் மீண்டும் ஓன்று சேர ஐஸ்வர்யா செய்யும் முயற்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் குறும்புத்தனமாக இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ‘முல்லை’ காவ்யா விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிலையில் சீரியலில் கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆட்டோ ஓட்டுவது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இவர் சீரியல் வேறு வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்ய உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த எபிசோடுகள் இக்கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!