பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ‘முல்லை’ காவ்யா விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

1
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து 'முல்லை' காவ்யா விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து 'முல்லை' காவ்யா விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ‘முல்லை’ காவ்யா விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா அந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக வெளியாகி வரும் செய்திகள் ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு சூப்பர் ஹிட் சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. கூட்டுக்குடும்ப வாழ்க்கையை அழகாக சித்தரிக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் தொடர்ச்சியாக தங்களது வரவேற்பை கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் மற்ற சீரியல் கதைகளைப் போல இல்லாமல் குடும்ப உறவுகளை மேம்படுத்தி எடுக்கப்படும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் மக்களின் விருப்பமான ஒன்றாக இருந்து வருகிறது.

பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட்டிற்கான வித்தியாசமான டாஸ்க் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இந்த சீரியலின் ஆரம்பம் முதல் வெவ்வேறு கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சில நடிகர், நடிகைகள் சீரியலை விட்டு விலகியுள்ளனர். சிலர் மக்களை விட்டு மறைந்துள்ளனர். அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜனார்த்தனன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர், குமரேசன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் நெல்லை சிவா, முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா ஆகியோர் இந்த உலகை விட்டு கடந்து விட்டனர்.

இதில், மறைந்த விஜே சித்ராவின் முல்லை கதாப்பாத்திரத்துக்கு பதிலாக நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். இப்போது மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்த விஜே சித்ராவின் முல்லை கதாப்பாத்திரத்தில் ஏற்பட்டிருந்த வெற்றிடத்தை நடிகை காவ்யா சரி செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ்சின் புதிய திரைப்படம் ஒன்றில் நடிகை காவ்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ வைல்ட் கார்டு என்ட்ரி ஆக ப்ரியா பவானி ஷங்கர்? ரசிகர்கள் உற்சாகம்!

அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் உருவாகும் ‘ஊர்க்குருவி’ திரைப்படத்தில் நடிகர் கவின் நடிகை வாணி போஜன் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் காவ்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்போது இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் நடிகை காவ்யா, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகுவார் என தெரிகிறது. தற்போது தான் காவ்யாவை முல்லையாக ஏற்றுக்கொண்டு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள், சீரியலில் மீண்டும் புதிய மாற்றம் ஏற்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!