பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட்டிற்கான வித்தியாசமான டாஸ்க் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட்டிற்கான வித்தியாசமான டாஸ்க் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட்டிற்கான வித்தியாசமான டாஸ்க் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட்டிற்கான வித்தியாசமான டாஸ்க் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சியின் இன்றைய லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் இன்று நடைபெற இருக்கிறது.

‘பிக் பாஸ் 5’ நிகழ்ச்சி

விஜய் டிவியில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 2 வாரங்கள் வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், ஒருவர் வெளியேற்றப்பட்டு தற்போது 15 பேர் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் நாடியா சான் குறைந்த அளவில் வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டு உள்ளார். நேற்றைய போட்டியில் அபிஷேக் மற்றும் இமான் அண்ணாச்சி இருவருக்கும் சண்டை வந்து விட்டது.

விஜய் டிவி ‘பிக் பாஸ் சீசன் 5’ வைல்ட் கார்டு என்ட்ரி ஆக ப்ரியா பவானி ஷங்கர்? ரசிகர்கள் உற்சாகம்!

பலரும் தங்களது உண்மை முகத்தினை தற்போது தான் காட்டி வருகின்றனர். இதனால் போட்டி சூடு பிடித்துள்ளது. தற்போது இன்றைக்கான முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இமான் அண்ணாச்சி லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க்கை படிக்கிறார். அதில் பிக் பாஸ் வீடு அருங்காட்சியமாக மாற்றப்பட இருக்கிறது எனவும், அரிய வகையான 5 நாணயங்கள் வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதனை முதலில் கண்டுபிடிக்கும் நபர் அதனை எடுத்ததும் கேமராவில் காட்ட வேண்டும்.

லட்சுமி அம்மா இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஜீவா – வைரலாகும் வீடியோ!

பின்னர் அதனை மறைத்து வைத்து கொள்ள வேண்டுமாம். இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் நாமினேஷனில் இருந்தால், அவர் விலக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் பலரும் சீரியஸ் ஆக விளையாடுகின்றனர். வருண் மற்றும் மதுமிதா இருவரும் நாணயங்களை கண்டுபிடித்து விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷன் முடிந்துள்ள நிலையில், அபிஷேக், அபினய், பிரியங்கா, இசைவாணி, அக்சரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!