‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் – இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் - இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் - இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் – இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!

தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புது வருவான குழந்தையை நடிகை சுஜிதா கொஞ்சி விளையாடுவது போல வெளியாகி இருக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வைரல் ரீல்ஸ்

பல்வேறு நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த தனத்தின் பிரசவ காட்சிகள் இந்த வாரம் வெளியான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடுகளில் இடம்பிடித்திருந்தது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையின் படி திருமணமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து தனத்துக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு புது வரவாக வந்திருக்கும் குழந்தையை கொண்டாடி வருகின்றனர் குடும்பத்தினர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து ‘முல்லை’ காவ்யா விலகல்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதே நேரத்தில் சரியான நேரத்தில் தனத்துக்கு உதவி செய்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துக்கு கொஞ்சம் நெருக்கமாக மாறி இருக்கின்றனர். இப்போது இந்த சீரியலில் ஏற்கனவே கயல் என்ற கதாப்பாத்திரத்தில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்து வரும் பட்சத்தில் தற்போது இன்னுமொரு குழந்தை இனி இந்த சீரியலில் பயணிக்க இருக்கிறது. அதனால் இதன் கதைப்பின்னணி அந்த குழந்தைகளை சுற்றி அமைக்கப்படும் என்று எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் லக்ஸரி பட்ஜெட்டிற்கான வித்தியாசமான டாஸ்க் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வைத்து புதிய வரவான குழந்தையை நடிகை சுஜிதா கொஞ்சி விளையாடுவது போல எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக இந்தியாவின் சென்ஷேஷனல் பாடலாக உருவாகி இருக்கும் சிங்கள மொழியில் ஆன ‘மணிகே மாஹே ஹிதே’ பாடலுக்கு நடிகை சுஜிதா, கம்பம் மீனா ஆகியோர் காரில் அமர்ந்தவாறு ரீல்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!